பழங்குடியினருக்காக பல வருடங்கள் முன்பே போராடிய பாமக.. 'திண்டுக்கல் சம்பவத்தை' நினைவூட்டும் ராமதாஸ்
சென்னை: டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அரசியல், அன்றாட நிகழ்வுகள் குறித்த அறிக்கைகள், அறிவிப்புகளை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்கள், பழைய நினைவுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
தற்போது ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சைகள் பாமகவைச் சுற்றி சுழன்றடித்துக் கொண்டிருக்கும் சூழலில், மலைவாழ் மக்களுக்காக பாமக கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னார் அதாவது 2000 ஆண்டில் திண்டுக்கல்லில் நடத்திய மிகப்பெரிய போராட்டம் குறித்த நினைவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் , பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் போராடும் கட்சி. பிற கட்சிகளைப் போல வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சியல்ல. செயலில் காட்டும் கட்சி. அதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளை கூற முடியும். அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் எனப்படும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக நான் பங்கேற்று நடத்திய போராட்டம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் வாழும் இந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்று தன்னிடம் புகார் கூறினார்கள் எனவும், அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 12.12.2000 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இல்லம் முன் மலைவேடன் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடலில் இலை, செடி, கொடிகளை அணிந்தும், கைகளில் வில், அம்புகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்தபோது திண்டுக்கல் நகரம் திணறியது என அப்போது வந்த பத்திரிகை செய்திகள் மற்றும் துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பகிர்ந்துள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications