சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முரசொலி பஞ்சமி நிலம்...ராமதாஸ் வழக்கு - ஆர்எஸ் பாரதிக்கு நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்!!

Google Oneindia Tamil News

சென்னை: தனக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறிக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை மு.க ஸ்டாலின் வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

PMK Ramadoss Murasoli land case; Court ordered to issue second notice to RS Bharathi

அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும், முரசொலி அறக்கட்டளையின் மூல பத்திரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவதூறு வழக்கில் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராக ராமதாசுக்கு உத்தரவிட்டது..

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

8 மாதங்கள் என்ன?.. எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது.. அமைச்சர்8 மாதங்கள் என்ன?.. எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது.. அமைச்சர்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் ராமதாஸ் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், மறு உத்தரவு வரும் வரை அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகாததால், அவர்கள் தரப்புக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

English summary
PMK Ramadoss Murasoli Panchami land case; Court ordered to issue second notice to RS Bharathi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X