சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிட்டு இயக்கத்தில் உருவான.. 'சல்லியர்கள்' திரைப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் நிலத்தில் ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'சல்லியர்கள்' திரைப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் வெளியிட்டுள்ளார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆரம்பக் கட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான 'மேதகு' படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுதான் 'சல்லியர்கள்' படத்தையும் இயக்கியுள்ளார்.

நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மேலும் அவர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து சல்லியர்கள் படத்துக்கு பாடல்களை எழுதி உள்ளார்.

Poet Vairamuthu has tweeted about the movie of Salliyarkal

ஈழ போர்க்களத்தில் நடந்த போர் மருத்துவம் பற்றியும், போர்க் களத்தில் இறங்கி பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் பற்றியும் பேசுவதே படத்தின் மையக்கரு என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த திரைப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சல்லியர்கள்

களத்தில் காயமுற்றோர்க்கு
அறுவைச் சிகிச்சை
செய்யுமொரு சாதியார்
என்ற பொருளில் இத்தலைப்பு
ஆளப்பெறுகிறது

Poet Vairamuthu has tweeted about the movie of Salliyarkal

கருணாஸ் தயாரிப்பில்
மேதகு படம் படைத்த
கிட்டு இயக்குகிறார்.
இசை - பிரவீன் குமார்

English summary
Poet Vairamuthu has tweeted about the movie 'Salliyarkal'. The director who directed the film 'Medaku' has also directed the film 'Salliyarkal'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X