விஜய்க்கும் பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பாடகர் வேல்முருகன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில், நடிகர் விஜய்யை புகழ்ந்து முருகன் பாடலை மாற்றி பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக, இந்து முன்னணி சார்பில் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், என் பாடலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

தவெக 3 ஆம் ஆண்டு தொடக்க விழா
இந்த விழாவின் போது, பாடக வேல்முருகன் 'உள்ளத்திலே நீ இருக்க' என்ற பக்தி பாடலை பாடினார். அப்போது அந்த பாடல் வரிகளை சற்று மாற்றி அமைத்து விஜய்யை புகழ்ந்து பாடினார். மேலும் விஜய்யை பார்த்து தளபதி வாழ்க.. தளபதி வாழ்க என்று வேல்முருகன் பாடினார். அப்போது விஜய்யும் மேடை ஏறி வேல்முருகனோடு குத்தாட்டம் போட்டார்.
வேல்முருகன் பாடும் போது அவரது மகளையும் மேடைக்கு வர சொல்லி விஜய் அவருடன் டான்ஸ் ஆடினார். பின்னர் வேல்முருகனுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் முருகன் பக்தி பாடலை, விஜய்யை புகழ்வது போல் திரித்து வேல்முருகன் பாடியது சர்சையை ஏற்படுத்தியது.
விஜய், வேல்முருகன் மீது புகார்
முருகன் பாடலை அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி பாடகர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகாரில், விஜய்யின் தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் முருகன் பக்தி பாடலை பாடகர் வேல்முருகன்,விஜய்யை புகழ்வது போல் திரித்து பாடி இருக்கிறார்.
அரசியல் ஆதாயத்திற்காகப் பக்திப் பாடல்களைத் தவறாகப் பயன்படுத்தி, மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளனர். இதனால் முருகப் பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே தவெக தலைவர் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோன்று மதுரை, சேலத்திலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வருத்தம் தெரிவித்த வேல்முருகன்
இந்த நிலையில் பாடகர் வேல்முருகன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். வேல்முருகன் கூறுகையில், நான் யதார்த்தமாகவே இந்தப் பாடலைப் பாடினேன்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
இந்தப் பாடலைப் பாடியதற்கும், தவெக தலைவர் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என் பாடலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முருகனை அவமதிப்பது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்" என்று அவர் கூறியுள்ளார்.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications