'வேலை நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது'.. ஆவடி கமிஷனர் வார்னிங்!
சென்னை: பணி நேரத்தில் காவலர்கள் செல்போன்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் பணி முடிந்த பிறகுதான் செல்போனை பயன்படுத்த வேண்டும் எனவும் ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள பாப்பான் சத்திரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
அதேபோல சோழவரம் காவல் நிலைய எல்லையில் ஆட்டந்தாங்கல், திருமுல்லை வாயில் காவல் நிலைய எல்லையில் அய்யப்பாக்கம் பகுதியிலும் புறக்காவல் நிலையங்களை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.

புறக்காவல் நிலையங்கள்
புறக்காவல் நிலையங்களில் பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்படும். இந்த மனுக்களுக்கு மனு ரசீது வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். 24 மணி நேரமும் இந்த புறக்காவல் நிலையங்கள் செயல்படும். பெங்களூரு- பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களை சோதனை செய்ய ஏதுவாக இந்த புறக்காவல் நிலையங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

செல்போன் பயன்படுத்த வேண்டாம்
பாப்பான் சத்திரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் திறந்து வைத்த பிறகு ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ரத்தோர் கூறியதாவது:- வேலை நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக் கூடாது. வேலை நேரம் முடிந்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். அதேபோல சமூக வலைத்தளங்களிலும் தேவையின்றி கருத்துக்களை பதிவிடாதீர்கள். அரசுதான் சம்பளம் கொடுக்கிறது.

3 துறைகளையும் இணைத்து
ஆகவே அரசு வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். ஆவடி மாநகர காவல் ஆணையர் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மதுவிலக்கு என 3 துறைகளையும் இணைத்து புறக்காவல் நிலையங்கள் அமைகின்றன. இத்தகைய நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தி வருவது முற்றிலும் தடுக்கப்படும்" என்றார்.

பணிக்கு இடையூறாக அமையும் செல்போன்
அனைவரது கைகளிலும் தற்போது ஆறாம் விரலை போல செல்போன்கள் தவழுகின்றன. செல்போன்கள் பயன்படுத்தவர்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. ஸ்மார்ட் போன்களை எப்போதும் கையில் வைத்து பயன்படுத்துவர்களையும் எங்கும் காண முடிகிறது. பணி நேரங்களில் கூட செல்போன்களை பயன்படுத்திக் கொண்டு வேலைகளில் கோட்டை விட்டு மேலதிகாரிகளிடம் வாங்கிக் கட்டி கொள்ளும் நிலைமையும் சமீப காலமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூட கூறுகின்றன.

சமூக ஆர்வலர்கள் கருத்து
அலுவலகத்தில் அமர்ந்து பணியில் பார்ப்பவர்கள் மட்டும் இன்றி கடைகளில் பணி செய்பவர்கள்,அன்றாட கூலி வேலை செய்பவர்கள் கூட செல்போன்களை வேலை நேரத்தில் பயன்படுத்துவதை காண முடியும். இதற்கு காவல் துறையினரும் விதி விலக்கு இல்லைதான். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போதும் ஒரு சில போலீசார் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டு நிற்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சில போலீசாரின் இதுபோன்ற செயல்கள் கவனக்குறைவை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
-
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications