சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருள் அகலட்டும்... கவலைகள் நீங்கட்டும்... அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து..!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜாதி, மத, இன, மொழி, பேதமற்ற புதிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

 ஒ.பி.எஸ்.-இ.பி.எஸ். வாழ்த்து

ஒ.பி.எஸ்.-இ.பி.எஸ். வாழ்த்து

புதிய ஆண்டும் நம்மை பொன்னுலகம் நோக்கி அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம். கடந்த ஆண்டின் அனுபவங்கள் அனைத்தும் புதிய ஆண்டில் பயணிக்க உதவட்டும். நம்மால் இயன்ற வகைகளில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என மகிழ்ச்சியையும், அமைதியையும் பகிர்ந்து வாழ உறுதி ஏற்போம்.

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

கடந்த கால இருள் நீங்கும்; கதிரொளி பரவும்; மக்களின் கவலைகளைத் துடைத்திட வல்ல, காக்கும் கரங்களைக் கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும்; தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன். இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும் - தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி வாழ்த்து

கே.எஸ்.அழகிரி வாழ்த்து

வருகிற புத்தாண்டில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், நல்லாட்சி மலர்ந்திடவும், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 விஜயகாந்த் வாழ்த்து

விஜயகாந்த் வாழ்த்து

எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கு இறைவன் அருளை வேண்டி, அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி, மத, இன, மொழி, பேதமற்ற புதிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்.

தேமுதிக வாழ்த்து

தேமுதிக வாழ்த்து

சாதி மதங்களை கடந்து சமதர்ம சமத்துவம் அமைவதுடன் கொரோனா இல்லாத ஆண்டாக வரும் புத்தாண்டு அனையட்டும். மக்களின் துண்பங்கள் நீங்கி வாழ்வில் ஏற்றமும் வளமும் பெற்று வாழ வேண்டும்.

English summary
Political Party Leaders New Year wishes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X