ரொக்கம் ரூ.3000 பொங்கல் பரிசு இதுவரை இத்தனை பயனாளிகளுக்கா? தமிழக அரசு குட்நியூஸ்.. இதென்ன கோரிக்கை
சென்னை: தைப் பொங்கல் 2026-ஐ தமிழகம் முழுவதும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், எந்த தடையுமின்றி கொண்டாடும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டோக்கன்கள் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்? பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது சம்பந்தமாக, பல்வேறு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளனர்.. அது என்ன?
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்..

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில், இந்த அனைத்து குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3000
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசை சீராகவும், ஒழுங்காகவும் விநியோகிக்க தமிழ்நாடு அரசு முன்கூட்டியே திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக, 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் ஜனவரி 4 முதல் ஜனவரி 7 வரை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்களால் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்பட்டன.
முதல் நாளில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம் நாளில் 300 முதல் 400 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் வகையில் விநியோக திட்டம் வகுக்கப்பட்டது... இதன் மூலம் நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல், அனைவரும் பாதுகாப்பாக பரிசுகளை பெறும் சூழல் உருவாக்கப்பட்டது.
ரேஷன் அட்டைதாரர்கள்
நேற்று வரை மாநிலம் முழுவதும் உள்ள 24,924 நியாய விலைக் கடைகள் மூலம் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,543.23 கோடி மதிப்பிலான பொங்கல் ரொக்கத் தொகை வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன...
அதேபோல, சில இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்க வந்த போது, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வீட்டில் இல்லாத காரணத்தாலோ, தவறுதலாக விடுபட்ட காரணத்தாலோ சிலருக்கு டோக்கன் கிடைக்காமல் போயுள்ளது... இதனால், ரேஷன் கார்டு இருந்தும் டோக்கன் கிடைக்கவில்லை என்றால் பொங்கல் பரிசு கிடைக்காதா?" என்ற குழப்பம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது..
இதற்கு நம்முடைய அரசு தெளிவான விளக்கத்தை தந்துள்ளது.. அதாவது அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எந்த விதமான விதிவிலக்கும் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.3,000 ரொக்கப் பரிசும் கட்டாயம் வழங்கப்படும் என அரசு உறுதி செய்துள்ளது.
டோக்கன் கிடைக்காதவர்கள்?
டோக்கன் இல்லாதவர்கள், தங்களது நியாய விலைக் கடையில் எந்த தெருவைச் சேர்ந்த மக்களுக்கு எந்த நாளில் விநியோகம் நடைபெறும் என்று வெளியிடப்பட்ட பட்டியலை பார்த்து, அந்த நாளில் நேரடியாக கடைக்கு சென்று பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் உள்ளவர்களுக்கு விநியோகம் முடிந்த பிறகு, டோக்கன் இல்லாதவர்களுக்கும் கடைசியாக பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
மேலும், டோக்கன் பெறாதவர்களுக்காக தனியாக ஒரு சிறப்பு விநியோக நாள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நாளில் சென்று சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொங்கல் பரிசுத் தொகுப்பையும், ரொக்கத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, டோக்கன் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற குழப்பத்திற்கோ, அச்சத்திற்கோ ஆளாக வேண்டியதில்லை. உங்களிடம் அரிசி குடும்ப அட்டை இருந்தால், கட்டாயமாக உங்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.3,000 ரொக்கப் பரிசும் கிடைக்கும் என்பதை தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
கிளம்பிய கையெழுத்து கோரிக்கை
இதனிடையே பல்வேறு ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் அலைமோதியபடி உள்ளதாம்.. நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இரவு நேரத்திலும், நிறைய ரேஷன் கடைகளில் கூட்டம் காணப்பட்டதாம்..
பொங்கல் தொகுப்பை பெற வரும் பயனாளிகளிடம் கைரேகையை பதிவு செய்த பிறகுதான், பணமும், பொருட்களும் வழங்கப்படுகின்றன.. ஆனால் ஸ்மார்ட் அட்டையை வைத்து கைரேகை பதிவு செய்யும் கருவி சில இடங்களில் மெதுவாக செயல்படுவதாக கூறப்படுகிறது..
பொருட்களை வழங்க ஒரு நபருக்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுவதாகவும், இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுவதாகவும் பயனனாளிகள் கூறுகிறார்கள்,.. எனவே முன்பு இருந்ததை போல கையொப்பம் பெற்று பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..
பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருக்கா
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் மாவட்ட கட்டுபாட்டு அறை எண் 044-27426872 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் மேலும் கீழ்கண்ட அலுவலர்களின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
1. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் - 9498341045
2. வட்ட வழங்கல் அலுவலர் செங்கல்பட்டு - 9445000172
3. வட்ட வழங்கல் அலுவலர் மதுராந்தகம் -9445000174
4. வட்ட வழங்கல் அலுவலர் திருக்கழுக்குன்றம் 9445000173
5. வட்ட வழங்கல் அலுவலர் திருப்போரூர் - 9445796413
6. வட்ட வழங்கல் அலுவலர் வண்டலூர் -9498341047
7. வட்ட வழங்கல் அலுவலர் செய்யூர் - 9445000175
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications