Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல நாளை முதல் ஸ்பெஷல் பஸ்.. சென்னையில் 6 பஸ் நிறுத்தங்கள்.. முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர். பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் நாளை முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongal Special Buses: Bus Terminals and the special bus services check the full details

சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நாளை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருந்துகளும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும்.

ஜனவரி 13ஆம் தேதியன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 1,855 சிறப்பு பேருந்துகளும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 2,214 பேருந்துகளும், 14ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் இருந்து 1,943 சிறப்பு பேருந்துகளும் மற்ற இடங்களில் இருந்து 2,461 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ் பொன்னேரி கும்முடிப்பூண்டி ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.

Pongal Special Buses: Bus Terminals and the special bus services check the full details

கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம்: பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம்: திண்டிவனம் விக்கிரவாண்டி பண்ருட்டி கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக :- திருவண்ணாமலை, போளுர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களுர் செல்லும் பேருந்துகள்.

அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் , அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் பின்வரும் வழித்தடங்களில் செல்லும்.

Pongal Special Buses: Bus Terminals and the special bus services check the full details

கோயம்பேடு CMBT லிருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.

வழக்கம் போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (OMR, ECR) வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, CMRL, ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் செல்லலாம்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஶ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பயணிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களிலும், tnstc செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Pongal Special Buses: Bus Terminals and the special bus services check the full details

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் தெரிவிக்க 1800 425 6151, 044- 2474 9002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால் கூட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் திரும்பி வருவதற்காக ஜனவரி 18 முதல் ஜனவரி 19 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+