முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உடனே களமிறங்கிய அமைச்சர்கள்.. ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு!
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு தரமாக வழங்கப்படுகிறதா? என்று விருதுநகரில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தரமற்ற பொங்கல் பரிசு
இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் வழங்கப்படும் தேதி குறிப்பிடபட்டு இருக்கும். அந்த நாளில் சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம். சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக சட்டமன்றத்திலும் அதிமுக புகார் கூறியது. இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கும் வந்தது.

முதல்வர் உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும் தரமான பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதேபோல் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தரமான பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில் முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விருதுநகர் தற்காஸ் தெரு பர்மா காலனி உள்ளிட்ட பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தரம் சரியாக உள்ளதா
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் உள்ளனவா? அவற்றின் எடை, தரம் சரியாக உள்ளதா? என்பது பற்றி அமைச்சர்கள் ஆய்வு நடத்தினார்கள். பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்களை வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் வட்டார வழங்கல் அலுவலர் உடன் இருந்தனர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications