அதே புத்தி கூர்மை.. மகிழ்ச்சி தந்த சிரிப்பு! மன்மோகன் சிங்கை சந்தித்த பிடிஆர் - உணர்ச்சிகர பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் அதே புத்தி கூர்மையுடன் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட ஜிஎஸ்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இலவசங்கள் தொடர்பான பிடிஆரின் பேச்சு தேசியளவில் விவாதப்பொருளான பின்னர் அவர் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கூட்டம் இது.

மன்மோகன் சிங்குடன் பிடிஆர் சந்திப்பு

மன்மோகன் சிங்குடன் பிடிஆர் சந்திப்பு

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த பழனிவேல் தியாகராஜன், முன்னாள் பிரதமரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கை சந்தித்து நலம் விசாரித்தார்.
டெல்லியில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்மோகன் சிங் அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங்கின் புத்தி கூர்மை

மன்மோகன் சிங்கின் புத்தி கூர்மை

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பழனிவேல் தியாகராஜன், "ஜிஎஸ்டி தொடர்பாக அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றபோது இணையற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் புத்தி கூர்மையாக இருக்கிறது. அவரது சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன். அவருக்கு மரியாதை தரும் விதமாக முதல் நாள் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது எடுத்த படத்தை பகிர்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

10 ஆண்டு பிரதமர்

10 ஆண்டு பிரதமர்

இந்தியாவின் நிதியமைச்சராகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்த மன்மோகன் சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் மக்களவை தேர்தல் வெற்றிபெற்றவுடன் பிரதமராக பதவியேற்றார். 2009 தேர்தலில் காங்கிரஸ் வென்ற பிறகும் அவரே பிரதமராக தொடர்ந்தார். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த அவர் 2014 தேர்தல் தோல்விக்கு பின்னர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வந்தார்.

உடல் நலக்குறைவு

உடல் நலக்குறைவு

கடந்த 2020 ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் தொடங்கியவுடன் தேசிய பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட உட்கட்சிக்குழுவின் தலைவராக மன்மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அதன் பின்னர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 ஓய்வு

ஓய்வு

இந்தியாவின் நிதியமைச்சராகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்த மன்மோகன் சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் மக்களவை தேர்தல் வெற்றிபெற்றவுடன் பிரதமராக பதவியேற்றார். 2009 தேர்தலில் காங்கிரஸ் வென்ற பிறகும் அவரே பிரதமராக தொடர்ந்தார். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த அவர் 2014 தேர்தல் தோல்விக்கு பின்னர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+