என் மனைவி தான் எனக்கு எல்லாம்! அவர் சொல்பேச்சை மீறமாட்டேன்! அமைச்சர் எ.வ.வேலு ஓபன் டாக்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்களை வாழ்த்தி பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தனது மனைவி பேச்சை மீறி தாம் எதுவும் செய்யமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
மனைவி பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்துவதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் வேலு பேசியிருக்கிறார்.
புது மண தம்பதிக்கு புத்திமதி கூறும் வகையில் நகைச்சுவையாக இந்தக் கருத்தை விழா மேடையில் பதிவு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.

திருமண விழா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறவினரான ஜெயந்தி -சரவணன் தம்பதியின் மகன் திருமண விழா சென்னையில் இன்று காலை நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். அந்த வகையில் புதுமண தம்பதிகளுக்கு அறிவுரை கூறும் விதமாக பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும் எனக் கூறினார்.

மனைவி பேச்சு
தாம் அப்படித்தான் வாழ்ந்து வருவதாகவும் இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமானால், தமது மனைவி பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டேன் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்தப் பேச்சை கேட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட அந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். யார் தனது மனைவி பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்துகிறாரோ அவரது வாழ்க்கை தான் சிறப்பாக இருக்கும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தவறு இல்லை
மனைவி பேச்சைக் கேட்டு நடப்பதை சிலர் கவுரவ குறைச்சலாக கருதுகிறார்கள் என்றும் மனைவி பேச்சை கேட்டு நடப்பதில் தன்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை எனவும் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திருமண அரங்கில் இருந்த பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்ததை காண முடிந்தது. இதனிடையே புதிதாக மண விழா காணும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திருமண விழா கூடம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லம் திருமண விழா கூடமாகவே மாறிவிட்டதாகவும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் முதல்வர் வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications