"நம்பியார்" இபிஎஸ்ஸுக்கு பச்சை கொடி காட்டாவிட்டால்! என்னவாகும் தெரியுமா? ஓபிஎஸ்ஸுக்கு மாஜி வார்னிங்
சென்னை: சந்தேகத்திற்கு இடமான தலைமை எங்களுக்கு வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பிரச்சினை எழுந்துவருகிறது. வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் கூறுகையில் ஜெயலலிதா இருந்த வரை அனைத்து தேர்தல்களிலும் முதலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இதுவை 90 சதவீத வெற்றியை உறுதிப்படுத்தும். ஆனால தற்போது இந்த இரட்டை தலைமை எனும் இலக்கணம் புரியாமல் எந்த தேர்தலாக இருந்தாலும் கடைசியாக பட்டியலை வெளியிடுகிறது அதிமுக என சொல்லும் நிலை வந்துவிட்டது.

இளைஞர்கள்
இளைஞர்களுக்கு யாருடைய பேச்சை கேட்பது என குழப்பத்தில் உள்ளார்கள். தொண்டர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் , 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். இந்த வாக்குகளை பெற வேண்டுமானால் நிர்வாக சீர்திருத்தம் தேவைப்படுகிறது.

உறுதியான நிலைப்பாடு
அதிமுகவில் உறுதியான நிலைப்பாடு இருக்க வேண்டும். திமுகவை எதிர்த்து போராடுவதே அதிமுகவின் குறிக்கோள். வலிமையான & உறுதியான தலைமையைதான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த ஒற்றைத் தலைமை யார் என பார்க்கிற போது எடப்பாடியார் உயர்ந்து நிற்கிறார். அனைவருடைய கருத்தும் அவர்தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும்.

எத்தனை முறை முடிவுகள்
இதுவரை எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்கியதே இல்லை. ஆனால் ஓபிஎஸ் எத்தனை முறை முடிவுகளை மாற்றி எடுத்துள்ளார் என்பதை நாடறியும் (என கூறி பத்திரிகை செய்தியை சுட்டிக் காட்டுகிறார்). அவர் வீழ்ந்ததற்கு என்ன காரணம், தொண்டர்களை அவர் கண்டுகொள்ளவில்லை. அவர்களை சுமப்பதற்கு தயாராக இல்லை.

குடும்பம் மீது அக்கறை
ஓ.பன்னீர்செல்வம் தன் குடும்பத்தினர் மீது மட்டுமே அக்கறை காட்டினார். அதிமுகவினரின் ரத்தத்தில் ஊறியது திமுகவை எதிர்ப்பது மட்டும் தான். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளார்கள் அதிமுகவினர். திமுகவிடம் சரணாகதி அடைந்தால் தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
66 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுகவின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஓ பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசுகையில், பராசக்தி வசனத்தை என் தந்தை மனப்பாடம் செய்ய சொல்லியதால் என் தலைமாட்டில் வைத்து மனப்பாடம் செய்தேன் என்கிறார். இதை யார் மனதை குளிர வைப்பதற்காக சொல்கிறார்?

தர்மயுத்தம் எதற்காக
தர்மயுத்தம் எதற்காக தொடங்கப்பட்டது? அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த போது இரு நிபந்தனைகள் வைக்கப்பட்டது. ஒன்று ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். இதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். அதிமுகவின் பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே ஓ.பன்னீர்செல்வம்தான். டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக உரையாடுகிறார். அவர்கள் இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்கள். எதற்காக எடுத்த நிலைப்பாட்டில் இவர் மாற வேண்டும்.

சந்தேக தலைமை வேண்டாம்
சந்தேக தலைமை வேண்டாம். தொண்டர்களை இணைக்கும் தலைமைதான் வேண்டும். முடிவுகளை மாற்றி மாற்றி எடுக்கும் சந்தேகத்திற்குரிய தலைமை வேண்டாம். இரட்டை தலைமையால் பல பிரச்சனைகளில் பின்னடைவு ஏற்பட்டதால்தான் ஒற்றை தலைமையை வலியுறுத்துகிறோம். ஜனநாயக முறைக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் பொதுக் குழுவில் கூறப்படவில்லை. மன உறுதியோடு இருக்கக் கூடிய தலைவரைத்தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் அவரிடம் எத்தனை முறைதான் பேச்சுவார்த்தை நடத்துவது? எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார். ஆனால் வெளியே ஊடகங்களில் நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக் கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதிமுகவை எதிர்த்த எஸ் டி திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ் உருவாகுவார். தென் மாவட்ட ஙகளில் ஓபிஎஸ் இடத்தை பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எம்ஜிஆருடன் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் நல்லவராக இருந்தாலும் அவரை மக்கள் கடைசி வரை வில்லனாகவே பார்த்தார்கள் என்றார்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications