சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்ரெட்.. ஹேக் செய்யப்பட்ட தமிழக அரசின் முக்கிய ஆவணங்கள்? பல லட்சம் க்ரிப்டோகரன்சி கேட்டு மிரட்டல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் சில முக்கிய ஆவணங்கள் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு தரப்பு அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளதாக ஊடங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இந்தியாவில் சமீப காலமாக சைபர் அட்டாக்குகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக அரசு தரப்பு இணைய பக்கங்களை குறி வைத்து இப்படி தாக்குதல்கள் நடக்கின்றன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஹேக்கர்கள் இந்திய அரசு ஆவணங்களை குறி வைத்து ஹேக்கிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் கணினிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் மூலம் இந்த ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

நீட் மாணவி மாயம் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் தேனிக்கு விரைந்த நாமக்கல் போலீஸ்! நீட் மாணவி மாயம் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் தேனிக்கு விரைந்த நாமக்கல் போலீஸ்!

 எப்படி ஹேக்?

எப்படி ஹேக்?

அதன்படி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் 12 கணினிகளை சோதனை செய்ததில் 8 கணினிகள் ஹேக் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 8 கணினிகளும் விண்டோஸ் 7 ஓஎஸ் மூலம் இயங்கி வந்துள்ளது. இதில் பெரிய அளவில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்காது. இப்போது இருக்கும் விண்டோஸ்கள் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. அதை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் கிடையாது. மைக்ரோசாப்ட் பாதுகாப்பு இதற்கு சரியாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஹேக்கிங் எளிதாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

எத்தனை

எத்தனை

இந்த ஹேக்கிங் குறித்து புகார் வந்ததும், தமிழ்நாடு அரசின் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் மற்றும் ஹேக்கிங் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் கணினி அவசர மறுமொழி குழு ஆகியவை உடனடியாக இது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் கணினிகள் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஹேக்கிங் குறித்த புகார்கள் வந்ததும் இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

 மிரட்டல்

மிரட்டல்

இதில் ஹேக்கர்கள் கணினிகளில் இருந்த கோப்புகளை ஹேக் செய்து அதை லாக் செய்துள்ளனர். அதாவது என் கிரிப்ட் செய்துள்ளனர். இந்த என் கிரிப்ட் காரணமாக முக்கியமான கோப்புகளை திறக்க முடியாது. மீண்டும் டி கிரிப்ட் செய்ய பாஸ்வேர்ட் தேவை. இந்த பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும் என்றால் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான க்ரிப்டோகரன்சிகளை கொடுக்க வேண்டும் என்று ஹேக்கர்கள் ஹேக் செய்யப்பட்ட கணினி திரையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

சீக்ரெட்

சீக்ரெட்

இதில் பல சீக்ரெட் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பணம் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்கள், விஐபிக்களின் பயண திட்டங்கள், அது தொடர்பான ஏற்பாடுகள், முக்கிய பயண விவரங்கள் இதில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தரப்பு இந்த கணினிகளை சோதனை செய்துவிட்டு அதை மறுத்துள்ளனர். முக்கியமான விவரங்கள் எதுவும் கசியவில்லை.

முக்கியம் இல்லை?

முக்கியம் இல்லை?

இதே கோப்புகள் வேறு கணினிகள் இருக்கிறது. அதை மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகிறார்கள். லாக் செய்யப்பட்ட கோப்புகள் எதுவும் முக்கிய தகவல்களை கொண்டு இருக்கவில்லை. விஐபிக்களின் பயண விவரங்கள், பாதுகாப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதில் இல்லை என்று போலீசார் விளக்கி

கொள்கை மாற்றம்

கொள்கை மாற்றம்

இந்த நிலையில் இது தொடர்பாக புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஹேக்கிங் செய்யப்படாமல் தடுக்க எப்படிப்பட்ட கணினிகளை பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எதை மேற்கொள்ள வேண்டும், ஹேக் செய்யப்பட்டால் எப்படி பதில் தர வேண்டும் உள்ளிட்ட கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Ransomware attack in Tamil Nadu Public Department computer, Hackers asking for lakhs of cyptocurrency : Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X