Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அடுத்த அதிரடி!வருகிறது முக்கிய மாற்றம்..போலி ஆவணப்பதிவுக்கு செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை போலி ஆவண பதிவுகளை தடுக்கும் நோக்கில் ஆவணங்களை எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதி பெறுபவர் புகைப்படம், இடது பெருவிரல் ரேகையினை பெறுவது கட்டாயமக்கப்பட்டது. ஆவணத்தை எழுதி கொடுத்தவரை அடையாளம் காட்டும் சாட்சிய நபரின் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகிய கூடுதல் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பத்திர எழுத்தர்கள் அல்லது, பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் புகைப்படம் இனி கட்டாயம் இடம் பெற வேண்டும். அவர்களின் உரிமம் எண், கையொப்பமும் இருக்க வேண்டும். அதை எழுதி வாங்குபவர்களின் புகைப்படமும் கடடாயம் இடம் பெற வேண்டும் எனறு ஐஜி சிவன் அருள் கூறியுள்ளார். இதன் மூலம் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், பத்திரபதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஒரு சொத்து பதிவு செய்யப்படும் போது, அந்த பகுதிகளில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் பத்திரப்பதிவுக்கு சந்தை மதிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பதிவு துறை அனுமதி வழங்குகிறது.

உயர் மதிப்பு

உயர் மதிப்பு

இதனால் பல சர்பதிவாளர் அலுவலகங்களில் உயர் மதிப்பை வைத்து தான் பத்திரப்பதிவு செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதையானது. இந்த நிலையில தற்போது வழிகாட்டி மதிப்பு மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். உயர் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டார்,

அடையாள அட்டை

அடையாள அட்டை

இந்நிலையில் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர், பதிவு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "போலி ஆவண பதிவுகளை தடுக்கும் நோக்கில் ஆவணங்களை எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதி பெறுபவர் புகைப்படம், இடது பெருவிரல் ரேகையினை பெறுவது கட்டாயமக்கப்பட்டது. ஆவணத்தை எழுதி கொடுத்தவரை அடையாளம் காட்டும் சாட்சிய நபரின் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகிய கூடுதல் விவரங்களை பதிவது சட்டம் விதியின் படி ஆவண மேலெழுத்துக்களில் தெளிவாக எழுதப்பட வேண்டும் எனவும், அந்த சாட்சி நபரின் அடையாள அட்டை, ஒளிவருடல் செய்யப்பட வேண்டும்.

வாரிசுரிமை சான்று

வாரிசுரிமை சான்று

பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் செய்த பின்பும் ஆள் மாறாட்டம் மூலம் ஆவண பதிவு, ஒரே சொத்தினை இரு நபர்களுக்கு எழுதி கொடுத்தல், போலியாக முன் ஆவணம், பட்டா, வாரிசுரிமை சான்று ஆகியவற்றை தயாரித்து ஆவணம் எழுதி தருதல், ஒரு சொத்தானது வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், அதை மறைத்து சொத்தை எழுதி தருதல், உரிமையியல் நீதிமன்றத்தால் சொத்தானது வேறு ஒரு வருக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தவறான நபர் எழுதி தருதல், மற்ற வாரிசுகளை மறைத்து விட்டு ஓரிரு வாரிசுக்கு மட்டும் முழு சொத்தையும் எழுதி தருதல் போன்ற தவறுகள் இன்னும் நடக்கின்றன.

குற்றவியல் நடவடிக்கை

குற்றவியல் நடவடிக்கை

போலியான ஆவணங்களிலும் ஆவணத்தை தயாரித்தவர் என்ற இடத்தில் ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் கையொப்பம் இருந்தாலும் அவை போலியாக இடப்பட்டுள்ள விவரம் என நிறைய விசாரணையில் தெரிய வருகின்றது. இதன் மூலம் ஒரு ஆவணத்தை போலி ஆவணம் என முடிவு செய்யும் போது அதனை எழுதி தந்தவர் யார் என்ற விவரத்தை சரியாக அறிய முடியும். மேலும், எழுதி தந்தவருக்கு இந்த போலி ஆவணம் தயாரிப்பில் ஏதாவது தொடர்பு இருப்பின் அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.ஆகவே, இதனை செயல்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்டவாறு நடைமுறை வகுத்து உத்தரவிடப்படுகிறது.

வழக்கறிஞர் பெயர்

வழக்கறிஞர் பெயர்

ஆவணத்தின் இறுதி பக்கத்தில் ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் பெயர், ஆவண எழுத்தர், வழக்கறிஞர் உரிமம் எண் கட்டாயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதன் அருகில் அவரின் பாஸ்பேர்ட் அளவிலான புகைப்படத்தை ஸ்கேன் செய்யபட்ட பிம்பம் அதிலேயே அச்சுபிரதியில் வரும் வண்ணம் அச்சுப்பிரதி எடுத்து அதன் அருகில் கையொப்பம் இட வேண்டும்.

புகைப்படம் கட்டாயம்

புகைப்படம் கட்டாயம்

ஆவணம் எழுதி கொடுப்பவரால் பதிவுத்துறையின் இணையதளத்தில் உள்ள வசதியை பயன்படுத்தியோ அல்லது இணையதளத்தில் உள்ள வரைவு ஆவணங்களை பயன்படுத்தியோ ஆவணம் தயாரிக்கும் நிலையில் அவர் அவரின் புகைப்படத்தையும் தயாரித்தவர் என்று கையொப்பம் செய்யுமிடத்தில் அச்சு பிரதியில் வரும் வகையில் அச்சுப்பிரதி எடுக்க வேண்டும். இணையதளத்தில் உள்ள வசதியை பயன்படுத்தாமல் சொந்தமாக வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டால், அது கண்டிப்பாக ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரால் மட்டுமே கையொப்பம் இடப்பட்டு இருக்க வேண்டும்.

சர்பதிவாளர்கள்

சர்பதிவாளர்கள்

ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர்களால் அச்சு பிரதி எடுக்கப்பட்ட புகைப்படம் அவருடையது இல்லை என சந்தேகம் வரும் நிலையில் அந்த ஆவண எழுத்தரை அல்லது வழக்கறிஞரை அழைத்து அவரை விசாரித்து அவருடைய புகைப்படம் தான் என உறுதி செய்த பின்பே ஆவண பதிவை மேற்கொள்ள சார்பதிவாளர்கள் கோரப்படுகின்றனர். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சார்பதிவாளர்கள் இம்முறையை சரியாக பயன்படுத்துகிறார்களா என மாவட்ட பதிவாளர்களும், டிஐஜிக்களும் உறுதி செய்ய கோரப்படுகின்றனர்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+