தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளைமுதல் திருப்புதல் தேர்வு! பொதுத்தேர்வு போல ஸ்ட்ரிக்ட்
தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் போல நாளைய தினம் முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
சென்னை: தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நாளைய தினம் முதல் தொடங்க உள்ளன. பொதுத்தேர்வுகள் போல தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டு இந்த திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு, பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திருப்புதல் தேர்வு
10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாவது திருப்புதல் தேர்வு, வரும் மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வரும் 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும், இரண்டாவது திருப்புதல் தேர்வு, மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஆங்கில தேர்வு தேதி மாற்றம்
இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அன்று நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத் தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வு போல ரிவிசன் தேர்வு
10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும். அதேபோல் பிளஸ்2 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை தேர்வுத்துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் மதிப்பீடு எப்படி
தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வேறு பள்ளியில் மேற்கொள்ளப்படும். மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் இதுபோன்ற திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் வரும் பொதுத்தேர்வில் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications