ரேஷன் கார்டு.. இவர்களுக்கு எல்லாம் இனி அரிசி இல்லையா.. பரவிய செய்தி.. தமிழக அரசு விளக்கம்
சென்னை : அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தள்ளது. சமூக ஊடகங்களில் பலருக்கும் ரேஷனில் இனி பொருட்கள் தரப்படாது என்று செய்தி பரவிய நிலையில், அது உண்மையில்லை என்று தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்குமே அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பச்சரிசி, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் உயர் வருவாய் உள்ளவர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள், காங்ரீட் வீடுகளில் வசிப்பவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் என பலருக்கும் ரேஷனில் இனி பொருட்கள் கிடையாது என்று சமூக ஊடகங்களில் செய்திகள்(வதந்திகள்) பரவின.

அச்சம்
இதற்கு ஆதாரமாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஊடகத்தில் வந்ததாக புகைப்படங்களை எடுத்து போட்டிருந்தார்கள். இதை உண்மை என்று நம்பிய பலர், ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடையாதா என்று அச்சம் அடைந்தனர். இதுபற்றி அரசுக்கு புகார்களை அனுப்பினர். இதையடுத்து தமிழக அரசு வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது.

முற்றிலும் பொய்
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தள்ளது. சமூக ஊடகங்களில் பலருக்கும் ரேஷனில் இனி பொருட்கள் தரப்படாது என்று பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்,.

அரசு ஊழியர்கள்
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் மற்றும் சிலவற்றில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறை கொட் கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பொது விநியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நம்ப வேண்டாம்
அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி மற்றும் பொதுவிநியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்து பொருட்களையும் தொடர்ந்து பொது விநியோக திட்டத்தின் பலன்களை அடையலாமை. சமூக ஊடகங்களில் பரவி வரும் இதுகுறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளக்கம்
இதனிடையே உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இந்த செய்தியை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் பாரபட்சமின்றி தொடர்ந்து வழங்கப்படும். இதில் எவ்வித மாற்றங்களும் இல்லை! சமூக ஊடகங்களில் உலா வரும் வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications