சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.1,000 உதவித்தொகை.. மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இதுதான் விண்ணப்பிக்கும் முறை

மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை, கணினி அடிப்படைப் பயன்பாடு, சுருக்கெழுத்து போன்ற திறன் பயிற்சிகள் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பும் விண்ணப்பிக்கும் முறையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் இயங்கி வருகிறது..

இதன் மூலம் வருடா வருடம், பழங்குடியின மற்றும் ஆதி திராவிட மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாக, திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கரூர் அருகே.. பட்டப் பகலில் மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் ஏற்றி கொலை.. நீதிமன்றத்தில் டிரைவர் சரண் கரூர் அருகே.. பட்டப் பகலில் மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் ஏற்றி கொலை.. நீதிமன்றத்தில் டிரைவர் சரண்

 மாணவர்கள்

மாணவர்கள்

அதன்படி இந்த வருடமும், 27 வது கட்ட உதவித்தொகையுடன் கூடிய இலவச சிறப்புப்பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளது.. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை பயன்பாடு, சுருக்கெழுத்துப் போன்ற திறன் பயிற்சிகள் 1000 ரூபாய் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளது. வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஜனவரி 11 மாத காலக்கட்டத்திற்கு இது நடக்க உள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்..

 உதவித்தொகை

உதவித்தொகை

இதுகுறித்து அறிவிப்பும், உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், "ஆர்வமுள்ள எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதார்கள் வேலைவாய்ப்பு அலுவலத்தின் மூலம் இப்பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். அரசால் வழங்கப்படவுள்ள திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியை கொண்டிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இப்பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 கல்வித்தகுதி

கல்வித்தகுதி

இதற்கு 18 வயது நிறைவு பெற்றவர்களாகவும் 27 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருப்பது அவசியம். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30ம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், இதனையடுத்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை அஞ்சல் அல்லது கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்..

 பயிற்சிக்கட்டணம்

பயிற்சிக்கட்டணம்

அனுப்ப வேண்டிய முகவரி: துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், 3-வது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம், 56 சாந்தோம் பிரதான சாலை, சென்னை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஆவண சரிபார்ப்பிற்காக வரும் போது எந்தவித பயிற்சி கட்டணமும் அல்லது வேறு எந்த படிகளோ வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Rs 1000 per month for students and skill training, Apply immediately
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X