Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    பொது இடங்களில் மாஸ்க் போடாதவங்களுக்கு ரூ.500 அபராதம்.. Chennai மாநகராட்சி அறிவிப்பு *Tamilnadu

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்தது.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.

     மாஸ்க் கட்டாயம்

    மாஸ்க் கட்டாயம்

    இத்தொற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும்.

    அபராதம் விதிக்கப்படும்

    அபராதம் விதிக்கப்படும்

    பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில், நேற்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், மக்கள் அதிகம் கூடும் உணவகம், திரையரங்கு போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

    சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

     சென்னையில் சிகிச்சை

    சென்னையில் சிகிச்சை

    பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 04.07.2022 நிலவரப்படி, 5,936 நபர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 04.07,2022 அன்று ஒரு நாள் மட்டும் 942 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . தொற்று பாதித்த நபர்களில் 5,264 நபர்கள் வீட்டுத் தனிமையிலும், 57 நபர்கள் மாநகராட்சியின் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும், 263 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    இவர்கள் அனைவரும் எந்தவித உயிர்பாதிப்பும் இன்றி நலமுடன் உள்ளனர். மண்டல அலுவலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து வீட்டுத் தனிமையில் உள்ள 5,264 நபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பொது இடங்களில் கூட்டம் வேண்டாம்

    பொது இடங்களில் கூட்டம் வேண்டாம்

    எனவே, பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து , சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

    500 அபராதம்

    500 அபராதம்

    மேலும் வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.

    தடுப்பூசி அவசியம்

    தடுப்பூசி அவசியம்

    மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத 8,68,930 நபர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3,76,917 நபர்களும் மாநகராட்சியின் சுகாதார மையங்களில் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னையில் ரூ. 500 அபராதம்

    சென்னையில் ரூ. 500 அபராதம்

    எனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் , பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு நாளை புதன்கிழமை முதல் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939 ன் படி ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+