ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவுடன் விசிக கூட்டணி? திருமாவளவன் நிபந்தனை!
சென்னை: சிறுத்தை தன் உடலில் உள்ள புள்ளியை மாற்றிக் கொண்டாலும், ஆர்எஸ்எஸ் எப்போதும் சிந்தனையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் கொள்கைகளை மாற்றிக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை என்று பேசியதற்கும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக மத நல்லிணக்க பேரணி, தமிழில் மனுதர்ம நூல் வெளியீடு, பாஜகவின் கொள்கைகளில் இருக்கும் பிரச்சினை ஆகியவற்றை தீவிரமாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்களை ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசிக சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிறிஸ்தவ மதம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், சகோதரத்துவத்தை போதித்த, பேணி பாதுகாத்து வரும் மதம் தான் கிறிஸ்தவம். இயேசுவை பின்பற்றும் மக்கள் அனைவருக்கும் இனி கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, கூலி உயர்வு கேட்டு போராடிய ஏழை மக்களை குடிசைக்குள் தள்ளி கொலை செய்த அவல நாள் இன்று. 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அது கூலி உயர்வுக்கு எதிரான போரட்டம் மட்டுமல்ல, சாதி வெறிக்கு எதிரான போராட்டம். கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து மக்கள் உரிமைகளுக்கு போராடிய களத்தில் சாம்பலாக்கப்பட்டார்கள்.

கீழ்வெண்மணி படுகொலை
அரை நூற்றாண்டு கடந்தும், இந்த மண்ணில் சாதி வெறி தொடர்ந்து வருவது வெட்கக்கேடானது. இந்தியா முழுவதும் சாதி மற்றும் மதத்தின் பெயரால், வன்முறை வெறியாட்டங்கள் நடக்கின்றன. அதனை சங்பரிவார் அமைப்புகள் அதனை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இந்திய அரசியலைப்பு சட்டத்திற்கு ஆபரத்து உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரத்துவம், சமத்துவம், மதசார்பின்மை போன்ற விழுமியங்களை பாதுகாக்க உறுதியேற்போம் என்று தெரிவித்தார்.

திருமாவளவன் விளக்கம்
தொடர்ந்து, கன்னியாகுமர் மாவட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தான் விமர்சிக்கிறோம் என்று பேசி இருந்தேன். மதசார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறார்கள். அதனால் சங்பரிவார் அமைப்புகள் தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்டு சமூகநீதி, சகோதரத்துவம், மதசார்பின்மை போன்ற கொள்கைகளுக்கு ஆதரவாக பேசினால் விமர்சிக்கப் போவதில்லை. ஒருவேளை கொள்கைகளை மாற்றிக் கொண்டால், அவர்களுடோடு நட்பு பாராட்டுவதில், கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை என்று கூறினேன்.

பாஜகவுடன் கூட்டணி?
அதற்கு பொருள், பாஜகவுடன் கூட்டணி வைக்க விசிக வேட்கையோடு இருக்கிறது என்பது அல்ல. அவர்களின் கொள்கைகள் மோசமான கொள்கைகள். திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக தான் குறிப்பிட்டேன். சிறுத்தை தன் உடலில் உள்ள புள்ளியை மாற்றிக் கொண்டாலும், ஆர்எஸ்எஸ் எப்போதும் சிந்தனையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆகவே அம்பலப்படுத்தும் நோக்கில் கூறினேன் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணி
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய எந்த அவசரமும் இல்லை. தற்போது திமுகவுடான கூட்டணியிலேயே விசிக பயணித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. அனைவரும் கட்டுக்கோப்புடன், ஒற்றுமையாக இருக்கிறோம். சனாதன சக்திகளை வீழ்த்த ஒன்றுபட்டு செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications