ஒரே பதிவெண்ணில் திருப்பத்தூரில் பல அரசு பேருந்துகள்.. எகிறி தப்பியோடிய டிரைவர்! ஆர்டிஓ செய்த சம்பவம்
வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆர்டி அதிகாரிகள் வாகனங்களை சீராக சோதித்து, போலி பதிவுகளை தடுப்பதில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. இதனால் பயணிகள் பாதுகாப்பும், சட்டப் பின்பற்றலும் உறுதி செய்யப்படுகின்றன. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்திலும் அதிரடி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தின் விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று, தமிழக அரசு ஒவ்வொருமுறையும் எச்சரித்தபடியே வந்தாலும், கட்டண கொள்ளை என்பது பேருந்துகளில் தமிழகத்தில் அதிகரித்தபடியே உள்ளது... குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில், இதுபோன்ற புகார்கள் மலிந்து வருகின்றன..

அரசு பேருந்துகள் - ஆர்டிஓ ஆய்வு
அதேபோல தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.. ஆனால், கடந்த வருடம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்ட பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்பட்டது தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, ஒரே பதிவெண்களில் 4 பஸ்களை ஆம்னி இயக்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை அப்போது உண்டுபண்ணியிருந்தது நினைவிருக்கலாம்..
திருப்பத்தூரில் ஒரே பதிவெண்ணில் பல பஸ்கள்
இந்நிலையில் ஒரே பதிவெண்ணில் பல பஸ்கள் திருப்பத்தூர் சாலையில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்-நாட்றம்பள்ளி சாலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த, ஒரு தனியார் சுற்றுலா பஸ்ஸை நிறுத்தி, அதன் பதிவு எண்ணை ஆய்வு செய்தார்..
அப்போது அந்த பதிவெண்ணில் ஏற்கனவே கூமாபட்டி பகுதியில் ஒரு தனியார் பேருந்தும், திருவண்ணாமலை ஆர்.டி.ஒ அலுவலகத்தில் ஏற்கனவே பிடிபட்ட பேருந்தும் ஒரே பதிவு எண்ணில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. அதாவது, ஒரே பதிவெண் மூன்று தனித்தனி பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
எகிறி தப்பி ஓடிய டிரைவர்
இந்த ஆய்வு நடப்பதற்குள் அந்த பஸ் டிரைவர் எகிறி தப்பிவிட்டார்.. இதையடுத்து, அந்த சுற்றுலா பேருந்தை உடனடியாக பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கடந்த வருடமும் இப்படித்தான் 2 இரண்டு சுற்றுலா பேருந்துகள் ஒரே பதிவெண்ணைப் பயன்படுத்தியதால் பிடிக்கப்பட்டிருந்தது... இப்போது திருப்பத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் மொத்தம் மூன்று போலி சுற்றுலா பேருந்துகள் பிடிபட்டுள்ளது.
கோவையில் சுத்தியல் எடுத்த கலெக்டர்
கோவை, கோவை மாவட்ட சாலைகளிலும் வாகன சோதனைகள் தீவிரமாகி கொண்டிருக்கின்றன.. கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் பவன் குமார் இன்று ஆய்வு செய்தார்.. அந்த ஆய்வின்போது, ஒரு பள்ளி வாகனத்தில் ஏறி, அவசர கதவு அருகில் இருந்த சுத்தியல் எடுத்து தட்டிப் பார்த்து ஆய்வை மேற்கொண்டார்..
பிறகு செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட கலெக்டர் பேசும்போது, "4 ஆர்டிஓ பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.. 1,644 வாகனங்கள் பிட்னஸ் சர்டிபிகேட் 70 % உள்ளதா என்று ஆய்வு செய்தபோது, 2 வாகனங்களுக்கு ஃபிட்னஸ் இல்லை. எனவே அவைகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
டிரைவர்கள் அனைவரும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.. அதேபோல அரசு பேருந்துகள் மற்றும் மாநகராட்சி வாகனங்களையும் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications