’கோமா’ நிலைக்கு சென்ற நித்யானந்தா! இந்தியா வர ப்ளான் போடும் சிஷ்யைகள்! உச்சகட்ட பரபரப்பில் கைலாசா..!
சென்னை : பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்தார்.
Recommended Video
இந்நிலையில் தலைமறைவாக உள்ள இவர், இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

சுவாமி நித்யானந்தா
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முகம் காட்டாத நித்யானந்தா கடைசியாக முகம் காட்டியது மதுரை சித்திரை திருவிழாவின் போதுதான். அதன் பிறகு அவர் பக்தர்களுக்கு சத்சங்கம், ஆசி வழங்குவது உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

கோமா நிலை
இந்நிலையில் தற்போது நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யானந்தாவிடம் இருந்து பிரிந்து வந்த சீடர் ஒருவரிடம் பேசியபோது, இந்தியாவில் பல இடங்களில் வலம் வந்த நித்தியானந்தா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய உணவு முறைகளுக்கு பழக்கப்பட்ட அவர் தற்போது அவ்வகை உணவுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் சுற்றிலும் கடல் இருப்பதால் உப்புக்காற்று அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

நுரையீரல் பாதிப்பால் சிக்கல்
இதனால் நித்யானந்தாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பண நெருக்கடி, இந்தியாவில் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமங்கள் உள்ளிட்ட கவலைகளும் சேர்ந்து கொண்டதால் அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து வந்த நித்தியானந்தாவுக்கு லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் நோயும், சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நித்தியானந்தாவுக்கு நுரையீரலில் தொற்றும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடல்நிலை மோசம்
நுரையீரல் தொற்றால் மூச்சு விட முடியாத நிலையில் இருக்கும் நித்திக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக மற்ற நாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற முடியாமல் இருக்கும் நித்யானந்தா தற்போது கோமா நிலைக்குச் சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருப்பதாகவும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா வர திட்டம்
இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா முழுக்க முழுக்க சமாதி நிலைக்கு சென்றுள்ளதாகவும் பக்தர்கள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்யும்படி கைலாசா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதே நேரத்தில் உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நேரத்தில் மத்திய அரசின் அனுமதியோடு நித்யானந்தா இந்தியா வர விரும்புவதாகவும் இதற்கான நடவடிக்கைகளை அவரது சீடர்கள் சிலர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் அவர் விரையில் இந்தியா வருவார் எனவும் கூறப்படுகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications