விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்!
பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று சசிகலா புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் பெயரை கூறாமல், கட்சியின் கொடியை மட்டும் வெளியிட்டார். அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் நடுவில் இருக்க கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கட்சியின் பெயரை வெளியிட்டிருக்கிறார்.
அனங்காபுத்தூர் ராமலிங்கம் என்பவர் தொடங்கிய அதிமுகவில் எப்படி எம்ஜிஆர் இணைந்தாரோ, அதே பாணியை சசிகலாவும் பின்பற்றி இருக்கிறார். இதையடுத்து கட்சியின் பெயராக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்று அறிவித்தார். இதன்பின் அஇபுதமமுகவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்பின் சசிகலா பேசுகையில், நான் தர மரமாக வரவில்லை.. தோப்பாகவே வந்துள்ளேன். எப்போதும் மக்களுடன் தான் இருப்பேன் என்பதற்கு இந்த சின்னமே சாட்சி என்று தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவேன். தென்னந்தோப்பு சின்னத்தை வைத்து வைத்து கூட்டணியில்லாமல் வர மாட்டேன்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகுகிறதா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது செங்கோட்டையனுக்காக சசிகலா பேசி இருந்தார். இதனால் செங்கோட்டையன் மூலமாக தவெக உடனான கூட்டணியில் சசிகலா தரப்பு இணையும் என்று கருதப்படுகிறது.
சிறையில் இருந்து வெளி வந்தபின் பெரியளவில் அரசியலில் நடவடிக்கைகளில் சசிகலா ஈடுபடவில்லை. ஆனால் சட்டசபைத் தேர்தல் நெருங்கிய பின் திடீரென புதிய கட்சி, சின்னம் என்று தீவிரமாக செயல்பட தொடங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இந்தக் கட்சிக்கு கட்டமைப்பு இல்லையென்றாலும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள் பலரையும் சசிகலாவால் தவெக கூட்டணி பக்கம் கொண்டு வர முடியும் என்று கருதப்படுகிறது.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications