இன்று முதல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம், செக் புக் கட்டணம் மாற்றம்.. புதிய விதிமுறைகள்!
சென்னை : எஸ்பிஐ வங்கியிலோ அல்லது அதன் ஏடிஎம்களிலோ ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதன்பின்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்தது. அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் இன்று முதல் நிறைய மாற்றங்களை சந்திக்க போகிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணத்தை எடுத்தல், வங்கி கிளையிலிருந்து பணம் எடுத்தல் மற்றும் பணம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்குமான அடிப்படை கட்டணங்களை மாற்றப் போகிறது.

எஸ்பிஐ அறிவிப்பு
இன்று முதல் (ஜூலை 1 முதல்) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு (பிஎஸ்பிடி) கணக்குகள் அல்லது SBI BSBD கணக்குகளுக்கு, ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் இலவசமாக 4 முறை பணத்தை எடுக்க முடியும். அதற்கு அடுத்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இது தவிர, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் 10 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகத்திற்கு கட்டணம் இல்லை. இந்த வரம்பைத் தாண்டி காசோலை புத்தகம் வாங்கினால் ஜூலை 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

4 முறைக்கு மேல் கட்டணம்
அதாவது, எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, எஸ்பிஐ வங்கியிலோ அல்லது அதன் ஏ.டி.எம்.மிலோ 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது, அந்த வரம்பை மீறி பணம் எடுத்தால் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

பணம் எடுக்க கட்டணம்
இன்று முதல் 1 ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். எஸ்பிஐ ஏடிஎம் தவிர மற்ற வங்கி ஏடிஎம்மில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காசோலை கட்டணங்கள்
இன்று முதல், எஸ்பிஐ தனது பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் காசோலை தாள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் போகிறது. ஜூலை 1 முதல் புதிய எஸ்பிஐ காசோலை புத்தகக் கட்டணங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஒரு நிதியாண்டில் எந்தவிதமான கட்டணமும் இன்றி 10 காசோலை தாள்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். அதாவது, ஒரு எஸ்பிஐ பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகத்தை தவிர கூடுதலாக பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்: புதிதாக காசோலை புத்தகம் வாங்கினால் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications