Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி, கல்லூரிகள் திறப்பு : ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட அரசு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும். வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Recommended Video

    School Reopen..என்ன செய்ய வேண்டும் ? | Educationist Prince Gajendra Babu

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன. ஒன்று முதல் பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

    Schools reopens : 20 students per classroom - these are the government guidelines

    2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. கல்வித்தொலைக்காட்சியிலும் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். ஜனவரி மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.

    அரசு அமல்படுத்திய கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாட்களில் வகுப்புகள் செயல்படும்.

    பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.
    ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.

    வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்.

    பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

    கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை

    ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு சுகாதாரத்துறையின் உதவி உடன் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம்.

    அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள், போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கல்லூரியில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், டயர்கள், போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். விஷ ஜந்துக்கள் உள்ளே புகாத வண்ணம் அடைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரியை சுத்தப்படுத்த வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+