நாளை ஸ்கூல் லீவ் இல்லை.. பள்ளிகள் செயல்படும்! விடுமுறையை ஈடுகட்ட அறிவுறுத்தல்!
சென்னை : மாண்டஸ் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி நாளை இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிகளுக்கு
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், பலத்த காற்றோடு, கனமழை பெய்தது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை டைம் டேபிள்
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில்
திருவள்ளூரில் பெய்த கனமழை காரணமாக கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மாவட்டங்களிலும்
மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், நாளை பெரும்பாலான பகுதிகளிலும் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலம் நாளை பள்ளிகள் செயல்படுவது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications