மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? - கொரோனா பரவல் தீவிரமடைவதால் பள்ளிகள் அவசர ஆலோசனை!
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், பள்ளிகளை ஷிப்ட் முறையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தவும் தனியார் பள்ளிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் பரவல் தீவிரம்
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சத்தில் பொதுமக்கள்
நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளில் போதிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பெற்றோர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். தங்கள் பிள்ளைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.

பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, மீண்டும் கொரோனா பரவல் மீண்டும் உயர்ந்து வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதல்வர் ஆலோசனை
இதற்கிடையே கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் கொரோனா கேர் மையங்களை தயாராக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் கடுமையாகலாம் எனவும் தொடக்க பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல் கசிந்துள்ளது.

ஷிப்ட் முறையில்
தற்போது வாரம் முழுவதும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் நிலையில், பள்ளிகளில் கூட்டத்தை குறைக்கும் வகையில் வகுப்புகளை 2 ஷிப்ட் ஆகப் பிரித்து நடத்தலாமா என்பது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்கள் பள்ளிக்கு வரும் வகையில், வகுப்புகளை இரண்டாகப் பிரித்து நடத்தும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் வாயிலாக
மேலும், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, தொற்று அபாயம் குறையும் வரை ஆன்லைன் முறையில் வகுப்புகளை எடுக்க பரிசீலிக்கலாம் எனறும் கூறப்படுகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு உடனடியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளன.

தனியார் பள்ளிகள்
இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், ஒருநாள் விட்டு ஒரு நாள் அல்லது காலை மற்றும் மாலை ஷிப்ட் முறையிலோ வகுப்பு நடத்தலாமா என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தொற்று அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பள்ளி முழுமையாக மூட வேண்டிய நிலை வரும்.

அரசின் உத்தரவைப் பொறுத்து
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று குறையும் வரை மாணவர்களை பாதியாக குறைத்து வகுப்புகளுக்கு வரவழைப்பது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என்ற திட்டத்தில் இருக்கிறோம். அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications