"டோட்டல் சேஞ்ச்".. திமுக பார்த்திபனுக்கு பறந்த மேலிட மெசேஜ்.. காரணமே வேற போல.. குறுக்கே வந்த "பாஜக"
சேலம் பார்த்திபன் தன்னுடைய ட்வீட் பதிவை நீக்கிவிட்டதை பாஜக விமர்சித்துள்ளது
சென்னை: மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தன்னை அழைக்கக்கூடாது என்று அதிகாரிகள் மிரட்டப்படுவதாக சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்த நிலையில், அந்த ட்வீட்டை உடனடியாக நீக்கிவிட்டார்.. இதை கவனித்துவிட்ட தமிழக பாஜக, அது சம்பந்தமான கேள்வியை எழுப்பி உள்ளது.. பார்த்திபன் ஏன் அந்த பதிவை நீக்கினார்?
சேலம் என்றாலே அது அதிமுகதான் என்ற அரசியல் வரலாறு பதிந்துவிட்டது.. ஆளும் கட்சியாக இருந்து, அதுவும் எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி காட்டியவர்தான் எஸ்.ஆர்.பார்த்திபன்.
இது எடப்பாடிக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கே பெரிய சறுக்கலாக அப்போது பார்க்கப்பட்டது.. கடந்த எம்பி தேர்தலில், 39 வருடங்களுக்கு பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது திமுக.. பார்த்திபனும் எம்.பி ஆனார்..

மாங்கனி
அப்போது முதல் பலம் வாய்ந்த நபராகவே திமுகவிலும் அறியப்பட்டு வருகிறார்.. இந்நிலையில், நேற்றைய தினம் பார்த்திபன் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "மாநகராட்சி சார்பாக நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பியான எனக்கு அழைப்பு தரப்படுவது இல்லை.. சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால்,அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத்தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

பார்த்திபன்
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது,எனக்கு வாக்களித்து 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று ! இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்!!, என்று எஸ்.ஆர் பார்த்திபன் பதிவிட்டிருந்தார்.

முணுமுணுப்புகள்
முதல்முறையாக பார்த்திபன் இப்படி போர்க்கொடி தூக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பார்த்திபனின் கோபத்துக்கு காரணம் என்ன? அதென்ன நிகழ்ச்சி? சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, இகொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது.. சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.. 994 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 1166 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களும் என மொத்தமாக 2160 வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

பாயிண்ட்
சேலம் மேயர், துணை மேயர், திமுக எம்எல்ஏ இவர்கள் எல்லாருமே கலந்து கொண்டுள்ளனர்.. ஆனால், சேலம் திமுக எம்பியான பார்த்திபன் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் சேலம் கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜேந்திரன் தான் என்றும் முணுமுணுப்புகள் எழுந்துள்ளன.. இவர்கள் 2 பேருக்கும் இடையேயுள்ள உட்கட்சி மோதலால் மாநகராட்சி அதிகாரிகளையும், மேயரையும் தன் பக்கம் ஆதரவாக வைத்துக்கொண்டு எம்பிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை என்று காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதனாலேயே காட்டமான ட்வீட்டை பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

நறுக் பாயிண்ட்
இதற்கு தலைமையிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இப்படி பொதுவெளியில் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது சரியில்லை என்று தலைமை எச்சரித்ததையடுத்து, அந்த பதிவை உடனடியாக அவர் நீக்கிவிட்டார்.. அதற்கு பதிலாக, அதற்கு பதிலாக சேலம் ஆணையர் சிறப்பாக செயல்படக்கூடியவர் அனைவரின் நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பது தான். முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சிறப்பாக செயல்படுவோம்" என்று அப்படியே யூடர்ன் போட்டு இன்னொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் பார்த்திபன்..

நாராயணன் நறுக்
இதைதான் சீண்டி கேள்வி எழுப்பி உள்ளது தமிழக பாஜக.. அக்கட்சியின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கண்ணில் இந்த ட்வீட்கள் பட்டுவிட்டது போலும்.. உடனே வழக்கம்போல், நறுக்கென கேள்வி கேட்டுள்ளார் நாராயணன்.. பார்த்திபனை மட்டுமல்ல, கடந்த வாரம் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமாரும் இப்படித்தான், ட்வீட் போட்டுவிட்டு, உடனே அந்த பதிவை நீக்கியிருந்தார்.. செந்தில்குமாருக்கும், நாராயணனுக்கும் 2 நாள் தொடர்ந்து ட்விட்டர் போர் நடந்து கொண்டிருந்தது.. முடிஞ்சா தொட்டுப்பாரு என்று சவால் விட்ட நிலையில், அந்த ட்வீட்டை செந்தில்குமார் நீக்கியிருந்தார்.. அப்போதே இதைப்பற்றி நாராயணன் திருப்பதி கேள்வி கேட்டிருந்தார்.

சுயமரியாதை
இருந்தாலும், இப்போது மறுபடியும், பார்த்திபன் விஷயத்திலும் நினைவுப்படுத்தி கேள்வி எழுப்பி உள்ளார்.. அதில், சில தினங்களுக்கு முன் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தான் செய்த பதிவை நீக்கினார். தற்போது, சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன் சொந்த கட்சிகாரர்களால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்ற பதிவை நீக்க வேண்டிய அவசியம் என்ன? உயிருக்கு மேலானது சுயமரியாதை அல்லவா? என பதிவிட்டுள்ளார்.. ஏதோ உட்கட்சி பிரச்சனையால் சேலத்தில் பஞ்சாயத்து எழுந்துள்ள நிலையில், திடீர்னு சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்து சுருக்கென கேள்வி எழுப்பியுள்ளது தமிழக பாஜக!
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications