சேது சமுத்திர திட்டம்: யோசித்து முடிவெடுங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. காயத்ரி ரகுராம் பரபர ட்விட்
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், "நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு வேண்டுகோள் என்றும் காயத்ரி ரகுராம் ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில், சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சேது சமுத்திர திட்டம்
அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின், "150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன். அண்ணாவின் கனவுத் திட்டம் அது. கருணாநிதி நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர் தான் சேதுசமுத்திரத் திட்டம். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நிறைவேற்றித் தர வேண்டும் என்று..
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

காயத்ரி ரகுராம் ட்விட்
இதையடுத்து இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க.வரவேற்றது. இந்த நிலையில், சேது சமுத்திர திட்ட விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சேது சமுத்திரம் திட்டம் பல ஆண்டுகளாக தீண்டப்படாத ஒன்று.

தொப்புள் கொடி போன்றது
புவியியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சேது சமுத்திரம் திட்டம் முடிவு செய்வதற்கு முன் ராமர் பாலத்தை உணர்வுப்பூர்வமாக என்னால் மறுபரிசீலனை செய்யக்கூட நினைக்க முடியவில்லை. இது இரண்டு தமிழ் நிலங்களை இணைக்கும் ஒரு இயற்கை பாலம். இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தொப்புள் கொடி போன்றது. பொருளாதார வளர்ச்சியை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு.. இது நிச்சயமாக திராவிடத்தின் புனித 3 கடலையும் இணைக்கும் இடம் இன்னொரு பக்கம் வைத்துக்கொண்டு.. அதை தொந்தரவு செய்வது சரியாக இருக்கும் என நினைக்கவில்லை. நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு வேண்டுகோள்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
கடந்த வாரத்தில் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்தார். அதன்பிறகு ட்விட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்றும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications