Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயிற்றில் அடித்தான்..கருவுக்கு ஆபத்து..சின்னத்திரை நடிகை திவ்யா புகார்..போலீசில் சிக்கும் அர்ணவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பிணியான தன்னை வயிற்றில் தாக்கியதாக செவ்வந்தி டிவி சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரில் செல்லம்மா சீரியல் நடிகரான அர்ணவ் மீது ராமாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. சமீபத்தில் இது குறித்து திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அர்ணவ் உடன் திருமணமான தகவலை தெரிவித்து இருந்தார். அப்போது தான் கர்ப்பமாக உள்ள தகவலையும் வெளியிட்டார்.

இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து கூறியிருந்தனர். இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்பு, தன்னை அர்ணவ் அடித்து கொடுமை படுத்துவதாகவும், அவர் தன்னுடைய வயிற்றில் அடித்ததில் ப்ளீடிங் ஏற்பட்டு, குழந்தை கலையும் நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீரியல் கதை போல

சீரியல் கதை போல

அர்ணவ் தற்போது தன்னுடன் சீரியலில் நடித்து வரும், நடிகை அன்ஷிதா உடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக கூறினார். பெரும்பாலான டிவி சீரியல்களில் எல்லாம் இரண்டு தாரங்கள் இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இரண்டு பெண்களை காதலிப்பது, இரண்டு பெண்களை திருமணம் செய்வது என்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதை நிஜ வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தி விட்டார் அர்ணவ் என்பது திவ்யாவின் குற்றச்சாட்டு.

அர்ணவ் மறுப்பு

அர்ணவ் மறுப்பு

திவ்யாவின் குற்றச்சாட்டுகளை அர்ணவ் மறுத்தார். திவ்யா தனது கணவரை விவாகரத்து செய்யாமலேயே தன்னுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகவும் அவர் தன்னுடைய குழந்தையை கலைப்பதற்காகவே இப்படி ஒரு நாடகம் ஆடி வருவதாக தெரிவித்தார்.

 ஈஸ்வர் மீது குற்றச்சாட்டு

ஈஸ்வர் மீது குற்றச்சாட்டு

இந்த நாடகத்திற்கு பின்னால் ஏற்கனவே மஹாலக்ஷ்மி சர்ச்சையில் சிக்கிய ஈஸ்வர் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
திவ்யா தன்னை தாக்கியதாக கூறிய நேரம் தான் அங்கு இல்லவே இல்லை என கூறினார். இதற்கான ஆதாரங்களையும் காட்ட தயாராக இருப்பதாக கூறினார்.

மாறி மாறி குற்றச்சாட்டு

மாறி மாறி குற்றச்சாட்டு

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திவ்யா, அர்ணவ் சொன்னார் என்பதற்காக தான் முஸ்லீம் மதத்திற்கு மாறியதாகவும், தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார் திவ்யா. செல்லம்மா சீரியலில் தன் கூட நடிக்கும் அஞ்சிதா உடன் நெருங்கி பழகி வரும் அர்ணவ், கர்ப்பமாக இருக்கும் தன்னை வெறுத்து ஒதுக்குவதாகவும் புகார் கூறினார்.

மனநிலை பாதிக்கப்பட்டவரா திவ்யா

மனநிலை பாதிக்கப்பட்டவரா திவ்யா

எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். வயிற்றில் குழந்தை சிக்கலாக இருக்கிறது ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்த நேரத்திலும் கரு கலைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அர்ணவ்தான் என்றும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்ணவ், திவ்யா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இந்த பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், தற்போது திவ்யா, கர்ப்பிணியாக தன்னை அர்ணவ் தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராமாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அர்ணவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெட்டிசன்கள் காட்டம்

நெட்டிசன்கள் காட்டம்

கடந்த சில நாட்களாகவே திவ்யாவின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் மதம் மாறி திருமணம் செய்த திவ்யாவை ஏமாற்றிய அர்ணவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செல்லம்மா நடிகர் மீது செவ்வந்தி நடிகை அளித்த புகார்.. அதற்கு பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகள் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+