பாலியல் வழக்கு : தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை: 'போக்சோ' உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கிட்டத்தட்ட 3மாதங்களுக்கு பிறகு 250 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றியவர் நாகராஜன் (வயது 59). இவர் 'சென்னை பிரைம்' என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான மைதானத்தில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் நாகராஜன் மீது அவரிடம் பயிற்சி பெற்ற 19 வயது வீராங்கனை,சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். அந்த 19 வயது மாணவி தனது மனுவில் பிசியோதெரபி பயிற்சி அளிப்பதாக கூறி பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 'போக்சோ' உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த மே 30ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகராஜன் மீது மேலும் பல வீராங்கனைகள் புகார் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது சென்னை போக்சோ நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட கைது செய்யப்பட்ட 3 மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் அவர் கோச்சாக இருந்த காலக்கட்டத்தில் அத்துமீறியதாக பெண்கள் அளித்த புகார்கள் இடம் பெற்றுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications