சினிமாவில் பலர் ரீல் ஹீரோ! களத்தில் இவர் ரியல் ஹீரோ! இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அன்புமணி பாராட்டு
சினிமாவில் பலர் ரீல் ஹீரோ... களத்தில் இவர் ரியல் ஹீரோ! என்று ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
சென்னை: கல்லறையில் மரம் விழுந்து மயங்கிக்கிடந்த இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். சினிமாவில் பலர் ரீல் ஹீரோ... களத்தில் இவர் ரியல் ஹீரோ என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பலரது உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இளைஞர் உயிருடன் இருப்பதை அறிந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி, உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ராஜேஸ்வரிக்கு பாராட்டு
தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் ராஜேஸ்வரியின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

நேரில் வாழ்த்து
மரம் விழுந்து காயம்பட்டு கிடந்தவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய ராஜேஸ்வரிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். கம்பீரமாகவும் கருணை உள்ளத்துடனும் தாங்கள் செய்த பணி போலீசாருக்கு பெருமை, ஊக்கத்தை தரும் என்றும் டி.பி.சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பாராட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி பாராட்டு
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை டி.பி.சத்திரத்தில் மரம் முறிந்ததில் இறந்து விட்டதாக கருதப்பட்டவரை , வெற்றுக் கால்களுடன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள்.

வீர தீர பதக்கம்
சினிமாவில் பலர் ரீல் ஹீரோ... களத்தில் இவர் ரியல் ஹீரோ! ஆய்வாளர் இராஜேஸ்வரி வட சென்னையில் பல இடங்களில் பணியாற்றிய போது அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், கொடிய குற்றவாளியை கைது செய்ததற்காக வீரதீர பதக்கம் பெற்றவர் என்பதையும் நான் அறிவேன். அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு அவர் சிறந்த முன்னுதாரணம்! என்று பதிவிட்டுள்ளார்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications