கோபத்தில் முக்குலத்தோர்.. குட்டி கரணம் போட்டாலும்.. 7 தொகுதி காலிதான்.. எடப்பாடிக்கு ஷாக் தந்த சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குகள் கிடைக்காது. எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும்.. எவ்வளவு முறை குருபூஜைக்கு போனாலும் வாக்குகள் கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.

Shocking data about southern Tamil Nadu seats against Edappadi Palanisamy in Lok Sabha elections

கட்சியின் தோல்விக்கு இரட்டை தலைமையும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனபின் மிகப்பெரிய மாநாட்டை முதல் கட்டமாக மதுரையில் நடத்தி உள்ளார்.

தென் மண்டலத்தில் எடப்பாடி பவரை காட்டும் வகையில் இந்த மாநாட்டை நடத்தினாலும் தென் மண்டலத்தில் அதிமுக வெல்ல சான்ஸ் குறைவு என்று என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அதில், பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார். தென் மாவட்டத்தில் ஆனால் அவர் எதிர்பார்க்கும் ஆதரவு வரவில்லை. அதனால்தான் மதுரையில் அவர் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. அதனால்தான் அங்கே புளிசாதம் மீந்து போனது. அதோடு சங்கரன் கோவிலில் அவர் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.

வந்த கூட்டம் கூட பாதியில் கலைந்து சென்றுவிட்டது. அதனால் பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார். அவர் அங்கே செல்லலாம். ஆனால் அவருக்கு அங்கே எதிர்ப்பு வரலாம். அவர் மீது முக்குலத்தோர் கோபத்தில் உள்ளனர். முக்குலத்தோர் கடுமையான கோபம் கொண்டு உள்ளனர். சசிகலாவிற்கு துரோகம் செய்தார்.

வாக்குகள் பிரியும்: டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்தார். கூட இருந்து ஆட்சி செய்ய உதவியாக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தார். 10.5 சதவிகிதத்தை பிரித்து வன்னியர்களுக்கு கொடுத்தார். மீதம் உள்ள மொத்த 10 சதவிகிதமும் தென் மண்டலத்திற்கு என்று சுருங்கிவிட்டது. இதனால் தென் மண்டலத்தில் கடுமையான கோபத்தில் உள்ளனர். இடஒதுக்கீட்டை காலி செய்துவிட்டார் என்று கோபத்தில் உள்ளனர்.

அதிமுக மீதே கோபத்தில் உள்ளனர். ஒரு காலத்தில் முக்குலத்தோர் காங்கிரசை ஆதரித்தனர். பின்னர் திமுகவை ஆதரித்தனர். அதன்பின் அதிமுகவை ஆதரித்தனர். எம்ஜிஆர் ஆதரவு, சசிகலா வருகை காரணமாக அதிமுக பக்கம் வாக்குகள் சென்றது. ஜெயலலிதா காலத்தில் மொத்தமாக முக்குலத்தோர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். இப்போது நிலைமை அப்படியில்லை.

துரோகம் மேல் துரோகம்: இப்போது திமுக முக்குலத்தோர் பக்கம் உள்ளது. அவர்களிடம் 5 பெரிய அமைச்சர்கள் முக்குலத்தோர்தான். அந்த அளவிற்கு அந்த தரப்பிற்கு ஆளும் தரப்பு ஆதரவு தருகிறது. அவர்களின் மக்கள் தொகைக்கு இவ்வளவு பெரிய ஆதரவு தேவையா என்பது ஒரு கேள்வி. ஆனால் இருந்தாலும் திமுக அவர்களை பிடித்துவிட்டது. இதனால் எடப்பாடி மீது முக்குலத்தோர் கோபத்தில் உள்ளனர். முக்குலத்தோர் கடுமையான கோபம் கொண்டு உள்ளனர்.

எடப்பாடி செய்த துரோகம் காரணமாக தென் மண்டலத்தில் அவர் வெற்றியே பெற முடியாது. 7 முக்கியமான தொகுதிகள் உள்ளன. இங்கே முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, சிவகாசி என்று 7 தொகுதிகள் முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதிகள். இங்கே எல்லாம் எடப்பாடிக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காது. அங்கே எல்லாம் கிளீன் போல்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

7- 9 லோக்சபா தொகுதிகளில் உள்ள 39 சட்டசபை தொகுதிகளில் 25ல் திமுகதான் வென்றுள்ளது.14 இடத்தில்தான் அதிமுக வென்றுள்ளது. இங்கே தினகரன் மட்டும் 4 லட்சம் வாக்குகள் வென்றுள்ளார். அப்படி எல்லாம் இருக்கும் போது.. இப்போது ஓ பன்னீர்செல்வம் இல்லாத போது.. டிடிவி தினகரன் வாக்கை பிரிக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குகள் கிடைக்காது. எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும்.. எவ்வளவு முறை குருபூஜைக்கு போனாலும் வாக்குகள் கிடைக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+