ஷர்மிகாவை நான் திட்டிய போது வரிந்து கட்டிட்டு வந்தீங்களே.. இப்போ என்னாச்சு.. பாடகி சின்மயி கேள்வி
சென்னை: நான் டாக்டர் ஷர்மிகாவை விமர்சித்த போது நான் ஏதோ பாவம் செய்துவிட்டது போல் என்னை திட்டினீர்களே தற்போது எல்லா யூடியூப் சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு அவரை விமர்சித்து வருகின்றன. தற்போது என்ன சொல்ல போகிறீர்கள்? என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபலம் என்றாலே பிராப்ளம்தான் என கவுண்டமணி காமெடியாக ஒரு படத்தில் சொல்வார். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ டாக்டர் ஷர்மிகாவுக்கு நன்றாகவே பொருந்துகிறது. இவரது தாய் டெய்சி சரண் பாஜக மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவராக உள்ளார்.

யூடியூப் சேனல்
இவரும் மருத்துவர். இவர் டெய்சி மருத்துவமனையை வைத்து நடத்தி வருகிறார். மகள் ஷர்மிகாவும் டாக்டர். சித்த மருத்துவம் படித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு இலவசமாக ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை வழங்கி வந்தார். இவர் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் என்பதாலும் தான் சொல்லும் மருத்துவத்திற்கு ஒரு விளக்கத்தையும் இவர் அளிப்பார் என்பதாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் பெருகினர்.

டெய்சி சரண்
நிறைய யூடியூப் சேனல்களும் ஷர்மிகாவை பேட்டி எடுக்க தொடங்கின. அது போல் ஷர்மிகா தனது வீட்டு சமையலறையில் வைத்துள்ள முக்கிய பொருட்கள் முதல் அவரது ஹோம் டூர் வரை அனைத்தையும் சில சேனல்கள் ஒளிபரப்பின. அவரையும் அவரது தாயையும் வைத்து பேட்டியும் எடுத்தார்கள். அதில் ஷர்மிகாவின் கடமை உணர்ச்சி குறித்தும் ஹெல்த் கான்சியஸ் குறித்தும் டெய்சி சரண் காமெடியாக விளக்கினார்.

ஷர்மிகா மருத்துவம்
இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக மருத்துவத்திற்கு எதிரான சில தகவல்களை ஷர்மிகா டிப்ஸ் என்ற பெயரில் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அறிவியலை படித்துவிட்டு அறிவியலை தள்ளி வையுங்கள் என ஷர்மிகா சொல்லிவிட்டு சில டிப்ஸ்களையும் கொடுத்து வருகிறார். அதில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் சுகரே வராது. நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்றெல்லாம் பேசியுள்ளார். மாட்டிறைச்சியை சாப்பிடக் கூடாது, மாடு நம்மை விட பெரிய விலங்கு அதனால் சாப்பிடக் கூடாது என்றும் நியாயப்படுத்தினார்.

குழந்தை பிறப்பு
அது மட்டுமல்லாமல் குழந்தை பிறப்பு என்பது அவரவர் பாவ புண்ணியத்தை பொருத்து என கூறியுள்ளதுதான், அனைவரையும் அதிர செய்தது. அப்போ குழந்தை இல்லாதவர்கள் பாவம் செய்தவர்களா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் கேட்டனர். அதிலும் ஆண் பெண் இணைவதால் குழந்தை பிறக்காது , கடவுள் மனசு வைக்க வேண்டும் என கூறியது மருத்துவத்திற்கு எதிரானது என கூறி ஷர்மிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஷர்மிகா மீது புகார் கொடுத்தால்
இதையடுத்து ஷர்மிகா மீது யாராவது புகார் கொடுத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவத் துறை இணை இயக்குநர் பார்த்திபன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் பேசியது ஒரு ஃபுளோவில் வந்துவிட்டது. மனிதர்கள் தவறு செய்வது இயற்கைதான் என கூறி தனது கருத்துக்கு மன்னிப்பும் கேட்டார் ஷர்மிகா.

பாடகி சின்மயி
இப்படிப்பட்ட சூழலில் டாக்டர் ஷர்மிகாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகி சின்மயி விமர்சித்திருந்தார். அந்த வகையில் அவர் மீண்டும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் . அதில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு ரியாக்ஷன் வீடியோ அப்லோட் செய்திருந்தேன். நமது தோலே பெரிய வாய், அதில் கெமிக்கல்களை போடக் கூடாது. ஷாம்பூ போடக் கூடாது ரத்தத்தில் கலந்து விடும் என ஷர்மிகா பேசியிருந்தார்.

வீடியோக்கள்
அவரை அப்போது நான் விமர்சித்த போது என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள், ஆனால் இப்போது பலரும் அவரது வீடியோக்களை எடுத்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நான் ஷர்மிகாவை விமர்சித்த போது நான் ஏதோ பாவம் செய்துவிட்டது போல் என்னைத் திட்டினார்கள். நான் சமீபத்தில் ஷர்மிகாவின் இன்னொரு வீடியோவை பார்த்தேன். அதில் குழந்தை பிறப்பது நல்லவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார்.

பாலியல் வன்முறை
எனக்கு தெரிந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தவர்கள், இவர்களுக்கெல்லாம் குழந்தை பிறக்கிறது. என் கருத்தை சொன்னற்காக என்னை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது ஷர்மிகாவை யூடியூப் சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு விமர்சித்து வருகிறார்களே என கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications