மின்சார வாரியத்தில் சூப்பர் மூவ்.. ₹15000 லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி! நேர்மை விவசாயி செய்ததை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் புதியதாக வீடு கட்டுபவர்கள் அல்லது வணிக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு மின் இணைப்பு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதனை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை வசதிகள் இருந்தும்கூட, சிலரால் எளிதாக மின் இணைப்பை பெற முடிவதில்லை.. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினால், சில அதிகாரிகள் லஞ்சம் கேட்டு திணறடித்து விடுகிறார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது..
ஒருவர் தனது புதிய கட்டிடத்திற்கு தற்காலிகமான மின் இணைப்பையோ அல்லது நிரந்தரமான மின் இணைப்பையோ பெறுவதற்கு சில அடிப்படை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

மின்சார வாரியம்
முதலில், விண்ணப்பதாரர் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று 'புதிய மின் இணைப்பு' (New Service Connection) என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அங்கு கேட்கப்படும் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். குறிப்பாக, இடத்தின் உரிமைக்கான ஆவணம் (Sale Deed), வீட்டு வரி ரசீது அல்லது பட்டா போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாடகை இடத்தில் தொழில் தொடங்குகிறீர்கள் என்றால், அந்த இடத்தின் உரிமையாளரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயம்.
புதிய மின் இணைப்பு
தற்காலிக மின் இணைப்பு என்பது பொதுவாக கட்டுமானப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. வீடு கட்டி முடிக்கும் வரை இந்த இணைப்பை பயன்படுத்தலாம். வேலைகள் முடிந்த பிறகு, அதனை நிரந்தர இணைப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதற்கான கட்டணங்கள் மற்றும் டெபாசிட் தொகைகளை ஆன்லைன் பேங்கிங் அல்லது கார்டு மூலமாகவே செலுத்திவிடலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உங்கள் பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரி குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வார்.
அவர் அந்த இடத்தில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டுமா, வயரிங் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, மீட்டர் பொருத்தப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும். பழைய முறையைப் போல அடிக்கடி ஆபீசுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
கரண்ட் கனெக்ஷன்
அனைத்து நிலைகளும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.. இதனால் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, பொதுமக்களின் நேரமும் மிச்சமாகிறது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீஷியன் மூலம் வயரிங் பணிகளைச் செய்திருப்பது மிக முக்கியம்.
இத்தகைய எளிய நடைமுறைகள் இருந்தபோதிலும், சில இடங்களில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பொதுமக்களை அலைக்கழிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
சென்னை ஆவடி
அந்த வகையில், சென்னை அடுத்த ஆவடியில் புதிய மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். ஆவடி கோவில்பதாகை பொண்ணப்பிள்ளை நகரைச் சேர்ந்த விவசாயி ராகவன் என்பவர், தான் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.. இவர் தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த வருவாய் மேற்பார்வையாளர், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ராகவனிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
மின் இணைப்புக்கு லஞ்சம்
காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீஸார் ரசாயன பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை ராகவனிடம் கொடுத்து, அதனைப் பாலசுப்பிரமணியத்திடம் கொடுக்குமாறு சொன்னார்கள்.
அதன்படி, ராகவன் கோயில்பதாகை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பாலசுப்பிரமணியனிடம் பணத்தை தந்துள்ளார்.. அவர் அந்தப் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ஆய்வாளர் மாலா தலைமையிலான போலீஸ் டீம், பாலசுப்பிரமணியத்தைக் கையும் களவுமாகப் பிடித்து அரெஸ்ட் செய்தனர்.
மின் இணைப்புக்காக லஞ்சம் வாங்கிய அதிகாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications