ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீங்க அண்ணாமலை.. உங்க முகத்தில்தான் விழும்..சினேகன் பதிலடி!
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மநீம தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசியதற்கு, பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு தனது நற்பணி மன்ற நிர்வாகிகளையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கமல்ஹாசன் அமெரிக்காவில் சென்று அரசியல் பேசுவதாக விமர்சித்திருந்தார்.
கமல்ஹாசன் மீதான அண்ணாமலையின் விமர்சனத்திற்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்துள்ளது. நேற்று அக்கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அறிக்கை விட்ட நிலையில், சினேகன் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்ணாமலை
'இன்டர்நேஷனல் லீடர் பெல்லோஷிப்' என்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குச் சென்றார். பயிற்சி முடிந்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கமல்ஹாசனையும் விமர்சித்திருந்தார். கமல்ஹாசன் அமெரிக்காவில் போய் அரசியல் பேசுவதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

எந்த காசுல போயிருக்கீங்க
இந்நிலையில், பிரபல திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான சினேகன் வெளியிட்டுள்ள வீடியோவில், "வணக்கம் அண்ணாமலை சார். எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு சொந்த காசில் போனார். நீங்கள் எந்த காசுல போயிருக்கீங்கனு எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காவுல இருந்து அரசியல் பேசுறார்னா இப்போ நீங்க எங்க இருந்து பேசுறீங்க?

கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துல இருக்கா
லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கால இருக்குனா, கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துல இருக்கா என்ன? அப்படி இல்லை அல்லவா? அவர் அங்கு போனதற்கு காரணம் தன் துறை சார்ந்து மேல் படிப்புக்கு போனார். போன இடத்தில் எங்கள் நற்பணி மன்ற தோழர்களைப் பார்த்து அரசியலும் பேசி இருக்கிறார், நல்ல விஷயங்களையும் பேசி இருக்கிறார்.

அந்த இடத்தில் கமல் இருக்கிறார்
ராஜராஜனை பற்றி இவ்வளவு காலம் கழித்து கமல் பேசுகிறார் என கிண்டலடித்து இருக்கிறீர்கள். அன்றைக்கு தான் அவர் பொன்னியின் செல்வன் படம் பார்த்தார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார், உண்மை வரலாற்றை சொன்னார். இந்த வரலாறு இன்று நேற்றல்ல, ஆதி சங்கரர் சொன்னது. காஞ்சி பெரியவர் சொன்னது, எழுத்தாளர் சோ சொன்னது. எல்லாவற்றையும் இன்றைக்கு நினைவுபடுத்த வேண்டிய இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார்.

ஆட்டம் ஆடுறீங்க
யார் வரலாறு பேசினாலும் அமைதியாக இருக்கிறீர்கள் நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். அரசியலை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டார் என்கிறீர்கள். நீங்களும் தான் ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள், அரசியல் சரியில்லை என்றால் நான் ஆடு மாடு மேய்க்க போய்விடுவேன் என்று. அவர் அப்படி அல்ல.

கருப்பாகவும் வெள்ளையாகவும்
அவர் அரசியலும் செய்கிறார், தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. உங்களுக்கு கொட்டிக் கொடுப்பது போல மேலிருந்தும், கீழிருந்தும்.. கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக்கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல.

ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள்
எனவே தான் தொழிலையும் பார்க்கிறோம், அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பண்போடு பகுத்து ஆய்ந்து பேசுங்கள், அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள். அது உங்கள் முகத்தில் தான் விழும்" எனப் பேசியுள்ளார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
முன்னதாக, மநீம நிர்வாகி முரளி அப்பாஸ், "ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரை கடித்துக்குதற முனைந்திருக்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும். நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவல் அதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசவேண்டும்" என பதிலடி கொடுத்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications