சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில், உங்கள் செல்போனிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் செல்போனிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தும் வசதியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இனி செல்போனிலேயே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எம்பாஸ்போர்ட் சேவா(mPassport Seva) அப்ளிகேஷனின் அப்கிரேடட் வெர்ஷனாக புதிய அப்ளிகேஷன் இருக்கும். இந்த புதிய அப்ளிகேஷன் ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் மற்றும் வின்டோஸ் போன் பிளாட்ஃபார்ம்களில் கிடைக்கும்.

தற்போது உள்ள எம்பாஸ்போர்ட் சேவா அப்ளிகேஷன் மூலம் அருகில் உள்ள பாஸ்போர்ட் மையம், காவல் நிலையம், கட்டணம், விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்காணிப்பது ஆகியவற்றை செய்யலாம். விரைவில் செல்போனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் மற்றும் கட்டணம் செலுத்தும் வசதி ஆகியவை இந்த அப்ளிகேஷனில் சேர்க்கப்படும்.

ஒன்றரை மாதத்தில்

ஒன்றரை மாதத்தில்

செல்போனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதி இன்னும் ஒன்றரை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி கோலக் குமார் சிம்லி தெரிவித்தார்.

செல்போனில் விண்ணப்பித்தாலும்

செல்போனில் விண்ணப்பித்தாலும்

செல்போனில் விண்ணப்பித்தாலும் ஏஆர்என் எண் உருவாக்கப்பட்டு அபாயின்ட்மென்ட் நேரம் குறிக்கப்பட்ட பிறகு தேவையான ஆவணங்களை நேரில் கொண்டு வந்து பாஸ்போர்ட் மைய அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என்றார் சிம்லி.

டிசிஎஸ்

டிசிஎஸ்

பாஸ்போர்ட்டுக்கு செல்போனில் விண்ணப்பிக்கும் புதிய அப்ளிகேஷனை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உருவாக்கி அதை வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அளிக்கவிருக்கிறது என்று சிம்லி கூறினார்.

ரொம்ப ஈஸி

ரொம்ப ஈஸி

பாஸ்போர்ட்டுக்கான புதிய அப்ளிகேஷன் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது ஆன்லைனில் அபாயின்ட்மென்ட் வாங்குவது கூட மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இந்த புதிய அப்ளிகேஷன் வந்துவிட்டால் ஏராளமான மக்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம். நெட்வொர்க் பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன் என்றார் சிம்லி.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பாதுகாப்பு காரணங்களால் புதிய அப்ளிகேஷன் எவ்வாறு செயல்படும் என்பதை தெரிவிக்க சிம்லி மறுத்துவிட்டார்.

English summary
The ministry of external affairs is going to introduce an application that will allow the people to apply and pay the fees for passports on their cell phones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X