ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? சொகுசாக ரயில்லயே போகலாம்! தென்னக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
சென்னை : ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அதேபோல் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே கூறியுள்ளதோடு, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.
தற்போது ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னக ரயில்வே. இந்நிலையில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அதேபோல் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே கூறியுள்ளதோடு, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை - தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) வரும் 8 ஆம் தேதி இயக்கப்பட்டு, மறுமாா்க்கமாக தூத்துக்குடி - சென்னை இடையிலான சிறப்பு ரயிலானது (06187) வரும் 9 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து 21 பெட்டிகளுடன் இரவு 12.25 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு காலை 7.50 க்குச் சென்றடையும்.
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட விழாக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது.
மறுமாா்க்கமாக தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது.
திருச்சியிலிருந்து மாலை 5.35 மணிக்கு 20 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்தடையும்." என கூறப்பட்டுள்ளது.
-
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications