இந்து மதத்தில் வாழ்வுக்கான அர்த்தங்கள் உள்ளது.. மதம்மாறிய சொற்பொழிவாளர் டி.ஏ ஜோசப் கருத்து
சென்னை: வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில் உள்ளது என்று கூறியுள்ளார் ஆன்மீக சொற்பொழிவாளர் ஜோசப். நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல மனம் விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார் ஜோசப். இந்து மதத்திற்கு மாறி விட்டாலும் ஸ்ரீ வைகுண்டவாசி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் சுவாமிகள் அறிவுறுத்தியபடி ஜோசப் என்ற பெயரிலேயே சொற்பொழிவாற்றி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதத்தில் இலக்கிய பட்டப் படிப்பை முடித்த ஜோசப் மதுரையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இந்து மதத்தின் மீது ஈர்க்கப்பட்டு எத்தனையோ நூல்களை எழுதியிருக்கிறார். இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்ற இவர் முதன்முதலாக 1991இல் எழுதிய 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டியா' என்ற புத்தகம், காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழகத்தின் பல மடாதிபதிகளால் பாராட்டப்பட்டது. 12 ஆழ்வார்களை பற்றி ஜோசப் எழுதிய கடவுளை காட்டும் கண்ணாடிகள் புத்தகமும் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றது.

கத்தோலிக்கராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது வாழ்க்கை பயணத்தை இந்து மதத்தை நோக்கி திருப்பினார். ரிஷி தர்மா பவுண்டேசனை கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கினார். அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு ரிஷி தர்மா பவுண்டேசனில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவரது ஆன்மீக சொற்பொழிவாற்றும் சேவையை பாராட்டும் வகையில் சொற்செல்வன் பட்டம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிறித்தவராக பிறந்த இவருக்கு தனது பத்தாவது வயதில் எழுந்த கேள்வியே இந்து மதத்தின் பக்கம் மீது பார்வையை திருப்ப வைத்தது. ஸ்ரீமான் வீரராகவ ஐயங்கார் மூலம் இந்து மதத்தை பற்றி அறிந்து பல கேள்விகளுக்கு விடையை கண்டு பிடித்தார். அதன்மூலமாக இந்துவாக மதம் மாறி தன்னை அர்ப்பணித்துக்கொண்டு ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். 28 வயதில் இருந்து ஆன்மீக சொற்பொழிவாற்றும் ஜோசப், கோவில்களில் ராமாயணம்,மகாபாரத கதைகளை கூறி வருகிறார்.
சனாதன தர்மம் என்பது காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும் என்று பொருள். ஆனால் சனாதன தர்மம் என்றாலே வர்ணாசிரம தர்மம் என்று சிலர் கூறுவது உண்மையல்ல. இன்றைக்கு நிறைய சமூக புரட்சிகளால் சனாதன தர்மம் காணாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் ப்ரவசன பாஸ்கரன் ஸ்ரீ டி.ஏ ஜோசப். இன்றைக்கும் நான்கு வகையான தொழில் பாகுபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கும். நான்கு வகையான தொழில் பாகுபாடு இல்லாமல் சனாதன தர்மம் இல்லை. இனப்பாகுபாடு இல்லாமல் இருந்தாலும் தொழில் பாகுபாடு இன்றைக்கும் இருந்து கொண்டு உள்ளது என்று கூறியுள்ளார் டி.ஏ. ஜோசப்.
இந்து மத புராண கதைகளைப் பற்றி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அனுமனை நம்பினால்தான் ராமாயணம் பற்றி தெரியும். இந்து மத கதைகளை நம்ப வேண்டும். அனுமன் பறந்தது எப்படி என்று பலர் கேட்கலாம். புராண கதைகள் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அவை கட்டுக்கதைகள் அல்ல. அமானுஷ்யம் என்ற வார்த்தை உள்ளது. கண்களால் பார்க்க முடியாத உணர மட்டுமே முடியக்கூடியவை அமானுஷ்யம். நாய் குரைப்பது சாதாரண விசயம். அதே நேரத்தில் அந்த நாய் மனிதன் போல பேசுவது சாதாரண நிகழ்வு அல்ல அது அமானுஷ்யம். மனித புலப்பாடுக்கு அப்பாற்பட்டது அமானுஷ்யம்.

ஆழ்நிலை மனோ தியானம் பற்றி தெரிந்தவர்கள் அமர்ந்த இடத்தில் இருந்து மூன்று அடி பறந்து காட்டுகிறார்கள். சாதாரண மனிதர்களால் இன்றைக்கு பறக்கும் போது அபரிமிதமான சக்தி கொண்ட அனுமர் இலங்கைக்கு பறந்து சென்றிருக்க முடியாதா என்று கேட்கிறார் ஜோசப். இந்து மத நம்பிக்கைகளை இந்துக்களாக பிறந்தவர்களே கேலியும் கிண்டலும் செய்யும் போது கிறிஸ்தவ மதத்தில் பிறந்து 10000 ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் ஜோசப்.
வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில் உள்ளது. எனவே, நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல மனம் விரும்புகிறது. இளைஞர்களுக்கும் ஆன்மிகம் சென்றடையும் வகையில் சமூகநீதியுடன் கதைகளை நான் விவரிப்பதால், எனது சொற்பொழிவு சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்து மதத்திற்கு மாறி விட்டாலும் ஸ்ரீ வைகுண்டவாசி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் சுவாமிகள் அறிவுறுத்தியபடி ஜோசப் என்ற பெயரிலேயே சொற்பொழிவாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications