• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணாமலை யாழ்ப்பாண விசிட்டில் அவமானப்படுத்தப்பட்ட தமிழ் தலைவர்கள்- ஈழத் தமிழ் பத்திரிகை விளாசல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இலங்கை யாழ்ப்பாண பயணத்தின் போது தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேல் காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக ஈழநாடு எனும் ஈழத் தமிழர் பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈழநாடு பத்திரிகையில் இப்படியும் நடக்கிறது என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள செய்தி: இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின்
தமிழகத் தலைவர் கே. அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமைதான் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாகியிருந்தது.திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைமையை அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் நிலைமை மாற்றமடைந்து வருகின்றது.

அமித் ஷா கேட்ட கேள்வி! அவ்ளோதான்.. அடுத்தடுத்த ஆக்சனில் குதித்த அண்ணாமலை.. டெல்லி தந்த ப்ரீ ஹேண்ட்! அமித் ஷா கேட்ட கேள்வி! அவ்ளோதான்.. அடுத்தடுத்த ஆக்சனில் குதித்த அண்ணாமலை.. டெல்லி தந்த ப்ரீ ஹேண்ட்!

தமிழகத்தில் பாஜக

தமிழகத்தில் பாஜக

தமிழகத்தை பல தசாப்தங்களாக மாறிமாறி திமுகவும் அஇஅதிமுகவுமே ஆட்சிசெய்து வருகின்றன. ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுகவில் அதன்
பலகோடி தொண்டர்களைக் ‘கட்டிப்போடக்'கூடிய தலைவர் ஒருவர் இல்லாததால் அது தடுமாறிக்கொண்டிருக்க பாரதிய ஜனதா கட்சி அங்கு வேகமாக வளர்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக அண்ணாமலை தலைமைப் பதவிக்கு வந்த பின்னர் அதன் செயல்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.

விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

இந்நிலையிலேயே அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். மலையகத்தில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த அவர்ää வடக்குக்கும் விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்திருந்த அண்ணாமலைää வடக்கு மாகாண
முன்னாள் முதல்வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரனை அவரின் இல்லம் தேடிச்சென்று சந்தித்திருப்பதை கவனிக்க வேண்டும். அவரை சந்தித்த பின்னர் தனது ருவிட்டர் பக்கத்தில் ‘இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்ää மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் மிகவும் நுண்ணறிவான விவாதம் நடத்தினார்' என்று பதிவிட்டி
ருக்கிறார்.

காக்க வைக்கப்பட்ட தமிழ் தலைவர்கள்

காக்க வைக்கப்பட்ட தமிழ் தலைவர்கள்

முதலில் விக்னேஸ்வரன் எப்போது இலங்கையின் பிரதமர நீதியரசராக இருந்தார் என்பதை அவரிடம்தான் கேட்டு அறியவேண்டும். அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாத்திரமே இருந்திருக்கிறார். தான் சந்திக்கின்ற ஒருவரைää அல்லது தான் விரும்புகின்ற ஒருவரை கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்
காக இதுபோன்ற வார்த்தைகளை சர்வ சாதாரணமாக நம்மவர்கள் பயன்படுத்துவது வழக்கமானதுதான்.நாம் விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்பது இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமே இருக்கின்றது. ஓர் அரசியல் தலைவராக ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தலைமையைச் சந்திக்கவேண்டும் என்றால் அது கூட்டமைப்பினரைத்தான் சந்திக்கவேண்டும். அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த அண்ணாமலை அவர்களை தனியார் விடுதி ஒன்றில் சந்தித்திருந்தார். ஆனால் தன்னைச் சந்திப்பதற்காக அவர் அவர்களை
ஒரு மணி நேரம் காக்கவைத்திருந்த செய்தியை ‘ஈழநாடு' வாசகர்கள் படித்திருப்பார்கள். ஓர் இனத்தின் தலைவர்களை சந்திக்க விரும்பிய ஒரு மாநில
தலைவர், அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்திருந்தார் என்ற செய்தியைப் படித்தபோது இந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

Recommended Video

  இந்திய பக்தர்களுக்கு இலவச விசா வழங்கணும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!
  அன்றும் இன்றும்..

  அன்றும் இன்றும்..

  இந்திய வெளியுறவு அமைச்சர் சு. ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை வந்திருந்தபோது யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை (பின்னர் பலரின் வேண்டுகோளின் பேரில் யாழ்ப்பாண பண்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவதை குறிப்பிடவேண்டும்) திறந்து வைத்தார். கொழும்பிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்ää ஜெய்சங்கரும் இணையவழியில் அதனைத் திறந்து வைத்திருந்தனர். அதற்கான விழா யாழ். கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது யாழ்ப்பாணத்திலுள்ள வி. ஐ. பிக்கள் அழைக்கப்பட்டுää அரங்கம் நிறைந்திருந்தது. அங்கு வந்திருந்தவர்களை வி. ஐ. பிக்கள் என்று நான்குறிப்பிடுவதுää இந்த விழாவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகமே தனிப் பட்ட வகையில் அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்திருந்தது. அவ்வாறு அழைப்பதெனில் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ளவர்களில் விசேடமானவர்கள் என்று தூதரகம் கணித்த பிரமுகர்கள்தாம். இவ்வாறு தாம் அழைத்த பிரமுகர்களையும் சுமார் ஒருமணி நேரம் காக்கவைத்தே அந்த திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அவ்வாறு தாமதமாக ஆரம்பிக்கப் பட்டபோதும் அதற்காக ஒரு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்ற சாதாரண நடைமுறைகூட காட்டப்படவில்லை. அதன் அர்த்தம் என்ன என்பது புரிந்தவர்களுக்குத்தான் புரியும். அதே மனநிலையிலேயே இப்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமையும் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இவ்வாறு ஈழநாடு பத்திரிகை எழுதியுள்ளது.

  English summary
  A Srilanka Tamil daily Eezhanaadu has slammed TN BJP Leader Annamalai's Jaffna Visit.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X