நீ மட்டும் தானே இருக்க..இரவில் வாட்ஸ்அப் வீடியோ கால்! போன் முழுவதும் ‘அந்த’ சாட்டிங்! பெற்றோரே உஷார்
சென்னை : வாட்ஸ் ஆப் வீடியோ காலில் மாணவியின் ஆடைகளை கழற்ற சொன்ன மாணவனை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்துள்ள நிலையில், இதேபோல் பல இளம்பெண்களிடம் அம்மாணவன் ஆபாச வீடியோ கால் சாட்டிங்கில் பேசியதைக் கண்டு காவல்துறையினரே அதிர்ந்து போயுள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ரேகை போல செல்போன் மாறிவிட்டது. எந்நேரமும் செல்போனிலேயே உலாவி கிடக்கின்றனர் மாணவர்கள்.
ஒருபுறம் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அரிய தகவல்கள், ஆன்லைன் வகுப்பு என செல்போன்கள் பயனுள்ளதாக இருந்தாலும் மறுபுறம் இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃப்ரீ பையர் என கேம்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

சைபர் கிரைம்
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமாக துடிக்கும் இளம் பெண்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் நான்கு வீடியோக்களை வெளியிட்டவுடன் சூப்பர், பிரமாதம், அருமை என கமெண்ட் செய்து அவர்களை தனது வலையில் வீழ்த்தி வாழ்க்கையை சீரழிக்கும் கொடூரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கல்லூரி மாணவன்
அந்த வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாட்ஸ் ஆப் எண்களை பெற்று வீடியோ காலில் மாணவியின் ஆடைகளை கழற்ற சொன்னவனை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்துள்ள நிலையில், இதேபோல் பல இளம்பெண்களிடம் அம்மாணவன் ஆபாச வீடியோ கால் சாட்டிங்கில் பேசியதைக் கண்டு காவல்துறையினரே அதிர்ந்து போயுள்ளனர்.

வீடியோ கால்
திருவொற்றியூர் எஸ்பி கோயில் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் பரத். ஆர்கே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ படித்து வந்திருக்கிறார். பரத்துக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மாணவியின் பதிவுகளுக்கு லைக் கமெண்ட் செய்து வந்த பரத் தொடர்ந்து அந்த மாணவியிடம் பேசியதோடு வாட்ஸ் அப் எண்ணையும் பெற்றிருக்கிறார். நட்பு அடிப்படையில் அந்த மாணவி பேச ஆரம்பித்த நிலையில் ஒரு கட்டத்தில் பரத்தின் தொந்தரவுகள் எல்லை மீற ஆரம்பித்திருக்கிறது.

அதிரடி கைது
இரவு நேரங்களில் வீட்டில் யாரும் இல்லை என்றால் எனக்கு வீடியோ கால் செய் என கூறியதோடு அடிக்கடி அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசுவதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இரவு நேரங்களில் மாணவிக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட பரத் மாணவியின் உடைகளை கழட்டுமாறு கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி தனக்கு தொல்லை கொடுத்த பரத் குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதை அடுத்து மாணவியின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.

ஆபாச சாட்
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் போலிசார் பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பரத்தினுடைய தொலைபேசியை பார்க்கும் போது பல பெண்களிடம் இது போல் ஆசை வார்த்தை கூறி வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதை புகைப்படம் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. .தொடர்ந்து மன்மத லீலைகளில் ஈடுபட்டு வந்த திருவொற்றியூர் மன்மதனை தைரியமாக காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்த மாணவியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications