பறந்து வந்த கற்கள்.. சேர்களை கேடயமாக தலையில் கவிழ்த்து.. திடீர் கல்வீச்சை சமாளிக்க திணறிய போலீசார்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினர் கல்வீசி கடுமையாக தாக்கிக்கொண்ட நிலையில், போலீசார் பலர் தலை மீது சேர்களை கேடயம் போல வைத்துக்கொண்டு சமாளித்தனர்.
Recommended Video
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு குவிந்த நிலையில், எடப்பாடி தரப்பினருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே ரகளை நடந்தது.
திடீரென இரு தரப்பினரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்தது. பலர் நாற்காலிகளை தலையில் கவிழ்த்துக்கொண்டு கல்வீச்சை சமாளித்தனர்.

போர்க்களமாக
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை அதிமுக தொண்டர்களின் ரகளையால் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

ஓபிஎஸ் வருகை
ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெருவாரியாக குவிந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

கல்வீச்சு
அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுகொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியே போர்க்களம் போல காட்சி தருகிறது.

கத்திக்குத்து
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு, எதிர் தரப்பினர் மீது கல்வீசி தாக்கினார். ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்தியால் குத்திய நிலையில், அவரது மணிக்கட்டில் ரத்தம் கொட்டியது. அதிமுக கட்சிக் கொடியை வைத்து கையில் உடனடியாக கட்டுப்போட்டனர்.

நாற்காலிகளை கேடயம் போல
திடீரென இரு தரப்பினரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்தது. கல்வீச்சின்போது, நாற்காலிகளை கேடயம் போல தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு தொண்டர்கள் பலர் கல்வீச்சில் காயமடையாமல் தப்பினர். சிலர் சிறு சிறு பேனர்களை கையில் எடுத்துக்கொண்டு தங்களை மறைத்துக்கொண்டு கல்வீச்சை சமாளித்தனர். போலீசார் பலரும் தங்கள் தலை மீது சேர்களை கேடயம் போல வைத்துக்கொண்டு சமாளித்தனர்.

ஓபிஎஸ் தரப்பின் கட்டுப்பாட்டில்
வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்வீச்சு, மோதலுக்குப் பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்துள்ளனர். அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

உள்ளே நுழைந்தனர்
அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து உள்ளே சென்றனர். ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழகத்தின் உள்ளே நுழைந்து, பேனர்களில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். ஓ.பன்னீர்செலம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்த நிலையில், ஓபிஸ் தலைமை அலுவலகத்தில் நுழைந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!












Click it and Unblock the Notifications