என்ன சாப்பிடுகிறீர்கள்.. டீ யா.. காஃபியா..? நரிக்குறவர்களை வாஞ்சையோடு உபசரித்த முதல்வர் ஸ்டாலின்!
விருதுநகர்: விருதுநகரில் தன்னை சந்திக்க வந்த நரிக்குறவர்களை வாஞ்சையோடு வரவேற்று பேசி தேநீர் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காக, முதல்வரை சந்தித்து நரிக்குறவர் சமுதாயத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அப்போது தன்னை சந்திக்க வந்தவர்களை அமர வைத்து பேசி அவர்களுக்கு விருந்தோம்பல் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதனிடையே இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;

பழங்குடியினர்
'பழங்குடியினர்' பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காகக் கழகமும் கழக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்குச் சென்று நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் வழங்கினேன்.

நரிக்குறவர்
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்டறிந்து தேவைகள் மதிப்பீட்டுப் பட்டியல் தயார் செய்திடவும் தலைமைச் செயலாளர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

என்னென்ன செய்திருக்கிறோம்?
அதனடிப்படையில், 5,875 குடியிருப்புப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பிடப்பட்டு, புதிய கான்கிரீட் வீடுகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பல்வேறு உதவித் தொகைகள், சாலை வசதி, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

நேரில் நன்றி
நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியிருக்கும் இவ்வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூகநீதிக்காக அனைத்து மட்டங்களிலும் கழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் இன்று என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications