சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரை ரூ.181 கோடி வந்துள்ளது.. கொரோனா நிதி அளிக்க நேரில் வர வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.50 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. ஆனால் இன்னும் கட்டுக்குள் வரவில்லை

Tamil Nadu government has allocated another Rs 50 crore for corona prevention work in the state

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் 31-ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு வந்து குவியும் கொரோனா நிதியை தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

தமிழகத்துக்கு தேவையான மருந்துகள்- ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் RTPCR கிட்கள் வாங்கிட மேலும் ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுவரை கொரோனா நிதிக்காக 181 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்படுவதால் ஊரடங்கு காலத்தில் கொரோனா நிதியை அளிக்க தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துளளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இணைய வழியில் (http://ereceipt.tn.gov.in/cmprf.html) நிதியை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has allocated another Rs 50 crore for corona prevention work in the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X