Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது. இன்று பதிவான வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய வாக்குப் பதிவில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் சில சர்ச்சைகளுடன் முடிவடைந்தது.

தமிழகத்தில் மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,602 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

Tamil Nadu Local Body Election 2022 Polling LIVE Updates and News Highlights

Feb 19, 2022, 11:48 pm IST

அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளது மாநகராட்சிகளில் 52.22%, நகராட்சிகளில் 68.22% வாக்குகளும் பதிவு தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் 74.68% வாக்குகள் பதிவு
Feb 19, 2022, 11:41 pm IST

சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன
Feb 19, 2022, 11:41 pm IST

தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவு வாக்கு பதிவு நிலவரம் குறித்து தமிழக மாநில தேர்தல் ஆணையம் தகவல்
Feb 19, 2022, 9:32 pm IST

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக முடிந்தது - டிஜிபி சைலேந்திரபாபு சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாக பேட்டி சில நிகழ்வுகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - டிஜிபி
Feb 19, 2022, 8:31 pm IST

மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம்
Feb 19, 2022, 8:31 pm IST

பாஜக பூத் முகவர் கிரிராஜன் என்பவரை கைது செய்தது போலீஸ்
Feb 19, 2022, 7:53 pm IST

தேர்தலில் முறைகேடு நடைபெற்றதால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - அதிமுக
Feb 19, 2022, 7:46 pm IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு - அதிமுக புகார்
Feb 19, 2022, 7:46 pm IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக புகார்
Feb 19, 2022, 7:45 pm IST

தேர்தலில் முறையில் நடைபெற்றதாகவும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - அதிமுக
Feb 19, 2022, 7:45 pm IST

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் புகார்
Feb 19, 2022, 7:23 pm IST

திமுக வேட்பாளருக்கு எதிராக திமுகவினரே செயல்படுகின்றனர்:அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
Embed:
Feb 19, 2022, 7:13 pm IST

திமுக எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைப்பு
Feb 19, 2022, 7:13 pm IST

சென்னை ஆர்.கே.நகரில் திமுக எம்.எல்.ஏ. எபினேசரின் கார் கண்ணாடி உடைப்பு
Feb 19, 2022, 7:13 pm IST

கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் ஆர்.கே.நகரில் பரபரப்பு
Feb 19, 2022, 7:13 pm IST

அதிமுகவினர் எம்எல்ஏவை வழிமறித்த நிலையில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது
Feb 19, 2022, 7:05 pm IST

சென்னை: நல்லவங்களுக்கு ஓட்டு போடுங்க... சீமான் வேண்டுகோள்!
Embed:
Feb 19, 2022, 7:02 pm IST

வாக்கு இயந்திரங்களுக்கு சீல்
Feb 19, 2022, 7:02 pm IST

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல்
Feb 19, 2022, 7:01 pm IST

சீல் வைக்கும் பணிகள் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது
Feb 19, 2022, 7:01 pm IST

பலத்த பாதுக்காப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன
Feb 19, 2022, 6:58 pm IST

கள்ள ஓட்டு புகார் - கரூரில் பரபரப்பு
Feb 19, 2022, 6:58 pm IST

கரூர் 12வது வார்டில் வாக்காளர் ஒருவரின் வாக்கு கள்ளஓட்டாக போடப்பட்டதாக புகார்
Feb 19, 2022, 6:57 pm IST

வாக்காளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடியில் பரபரப்பு
Feb 19, 2022, 6:57 pm IST

வாக்குச்சாவடியில் ஏராளமானோர் குவிந்ததால் போலீசார் குவிப்பு
Feb 19, 2022, 6:46 pm IST

திருமங்கலத்தில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை
Feb 19, 2022, 6:46 pm IST

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை
Feb 19, 2022, 6:45 pm IST

திருமங்கலம் 17வது வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை
Feb 19, 2022, 6:45 pm IST

17வது வார்டில் அதிக அளவில் கள்ளஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை
Feb 19, 2022, 6:45 pm IST

கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் தேர்தல் ஆணையம்: பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
Embed:
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+