Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்றல்ல, இரண்டல்ல.. 28 மாவட்டங்களில் கால் பதித்துள்ளது பாஜக.. வாக்குகள் பரவலாக என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாஜகவுக்கு இந்த முறை கைமேல் பலன் கிடைத்துள்ளது.

Recommended Video

    கைகொடுக்காத அரசியல் வியூகம்.. பாஜக 3வது பெரிய கட்சியா? உண்மை என்ன?

    தமிழ்நாட்டில் கடந்த ஜன. 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே இந்த நகரப்புற் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    இந்தத் தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், அதில் பதிவான வாக்குகள் 268 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

     திமுக வெற்றி

    திமுக வெற்றி

    இதில் பெரும்பாலான இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே மாபெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், அத்தனையும் அப்படியே ஒட்டுமொத்தமாக அள்ளியது திமுக! அதேபோல மொத்தம் 138 நகராட்சிகள் உள்ள நிலையில், அதில் 132 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல மொத்தமுள்ள 490 பேரூராட்சிகளில் குறைந்தது 430இல் திமுக வென்றுள்ளது.

    பாஜக

    பாஜக

    மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதேபோல தனித்துக் களமிறங்கிய பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர், மநீம கட்சிகளாலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக உடன் இணைந்து பயணித்த பாஜக, இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியது. இதில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்குக் கணிசமான இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி

    இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 300 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. அதில் குறைந்தது 200 வார்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பாஜக வென்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாகவே திராவிட கட்சிகளைத் தாண்டி தேசிய காட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜகவும், 2019இல் காங்கிரஸும் இதில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

     28 மாவட்டங்கள்

    28 மாவட்டங்கள்

    இது தவிரவும் கூட சுமார் 28 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாஜக வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் தமிழகத்தில் வடமாவட்டங்களான அரியலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களிலும் வெற்றியைப் பதிவு செய்தது. இதையெல்லாம் விட முக்கியமாகத் திராவிட கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையிலும் பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

     தலைநகர் சென்னை

    தலைநகர் சென்னை

    தலைநகர் சென்னையில் 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உஷா ஆனந்தன், காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியிலும் பாஜக தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. கடந்த 2011 தேர்தலில் பாஜக 272 வார்டுகளை வென்று இருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கையை பாஜக தாண்டியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 300 வார்டுகளை வரை பாஜக வென்றுள்ளது.

     கடந்த தேர்தல்கள்

    கடந்த தேர்தல்கள்

    கடந்த 2001ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அப்போது கூட்டணியில் இருந்த திமுக உடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்தித்தது. இருப்பினும், 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் பாஜக தனித்தே களமிறங்கியது. அதேபோல கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்தல்களை அதிமுக உடனேயே இணைந்து சந்தித்து வந்த பாஜக, இந்த முறை துணிச்சலாகத் தனித்துக் களமிறங்கியதில் கைமேல் பலன் கிடைத்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், பாஜக வலுவாக இல்லாத கடலூர், மதுரை, காஞ்சிபுரம், ஓசூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகாசி, வேலூர் ஆகிய இடங்களிலும் கூட பாஜக வென்றுள்ளது.

     இந்துத்துவா பிரசாரம்

    இந்துத்துவா பிரசாரம்

    இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "இந்த தேர்தல் பாஜகவுக்குத் திருப்புமுனை தரும் தேர்தலாகும். தமிழக அரசியலில் இப்போது ஒரு அத்தியாயம் தொடங்குகிறது. வரும் காலத்தில் தமிழ்நாட்டில் பாஜவால் மீண்டும் காமராஜர் ஆட்சியை வழங்கும் வாய்ப்புகள் இப்போது மிகப் பிரகாசமாக உள்ளது" என்றார். மேலும், பாஜக முன்னெடுத்துள்ள இந்துத்துவா பிரசாரத்திற்குத் தமிழகத்தில் ஓரளவு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளதை இது காட்டுவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

     பாஜக

    பாஜக

    ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது திமுக இந்தத் தேர்தலில் விஸ்வரூப வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக இரண்டாவது இடத்தில் வந்துள்ளது. ஒட்டுமொத்த வார்டுகளின் எண்ணிக்கையை வைரத்து பார்க்கும் போது, காங்கிரஸ் 3ஆவது இடத்தில் உள்ள போதிலும், அக்கட்சி வாங்கிய வாக்குகள் திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தனித்துக் களமிறங்கிய பாஜக அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இந்த முடிவுகளை பாஜகவுக்கும் அக்கட்சி தொண்டர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+