சர்ச்சையில் பெரியார் பல்கலை! ஜெகநாதனுக்கு வந்த சிக்கல்! ஆர்எஸ்எஸ் ஆதரவு? விளாசும் தாவக வேல்முருகன்!
சென்னை : பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவ தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
முதுகலை வரலாறு இரண்டாமாண்டு தேர்வு வினாத்தாளில், நான்கு சாதிப் பெயர்களை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி எனக் கேள்வி இடம்பெற்றுள்ளது.

பெரியார் பல்கலை சர்ச்சை
சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது, வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டிருக்கும் பின்னணியில் துணைவேந்தர் ஜெகநாதன் இருப்பதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சாதி சர்ச்சை
ஏனென்றால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, துணைவேந்தர் ஜெகநாதனின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அறிவிப்பை திரும்பப் பெறப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு
மோடி அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் வராத மாநிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை ஆளுநர்களாக நியமித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஆளுநர்கள் இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சக்திகளை துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் தான் இந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்.

துணைவேந்தர் ஜெகநாதன்
துணைவேந்தராக அமர்த்தப்பட்ட பிறகு வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் துணைவேந்தர் தனது பாசிச கரங்களை நீட்டி உள்ளார். அதனால் தான், முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியாக கேள்வி கேட்கப்பட்டிருக்கும் பின்னணியில், துணைவேந்தர் ஜெகநாதன் இருக்கலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.

உரிய விசாரணை
பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் அவரை இழிவு படுத்தும் விதமாகவும், பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம் சாட்டுகிறது. எனவே இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு, குறிப்பிட்ட வினாத்தாளை தயாரித்த பேராசிரியர்கள் யார்? இப்படி அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப கூறியது யார்?, அவர்களின் பின்புலம் ஆகியவற்றைக் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-சின் அடிவருடியாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது." என கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications