சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அதிகம் உள்ள 14 மாவட்டங்களில்.. தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்..முதல்வர் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு சரியான முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை மெல்ல உச்சமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 28,897 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Tamilnadu CM MK Stalin appoints ministers for corona to prevent actions in 14 districts

மத்திய அரசு பிம்பத்தை காக்க தடுப்பூசி ஏற்றுமதி செய்தது.. மிக கொடூரமான குற்றம்.. மணிஷ் சிசோடியா சாடல்மத்திய அரசு பிம்பத்தை காக்க தடுப்பூசி ஏற்றுமதி செய்தது.. மிக கொடூரமான குற்றம்.. மணிஷ் சிசோடியா சாடல்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு சரியான முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, நெல்லை, ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பூர், வேலூர் மற்றும் விழுப்புரம் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டம்

மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

பி.கே. சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம்

தா.மோ. அன்பரசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர்

கோயம்புத்தூர் மாவட்டம்

சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

கா. ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர்.

திருவள்ளூர் மாவட்டம்

சா.மு. நாசர், பால்வளத் துறை அமைச்சர்

மதுரை மாவட்டம்

பி. மூர்த்தி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.

பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை

தூத்துக்குடி மாவட்டம்

கீதா ஜீவன், சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

சேலம் மாவட்டம்

வி. செந்தில் பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

திருச்சி மாவட்டம்

கே.என். நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

திருநெல்வேலி மாவட்டம்

இ.பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர்

ஈரோடு மாவட்டம்

சு. முத்துசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர்.

காஞ்சிபுரம் மாவட்டம்

எ.வ. வேலு, பொதுப் பணித் துறை அமைச்சர்

திருப்பூர் மாவட்டம்

மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்

வேலூர் மாவட்டம்

துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர்.

ஆர். காந்தி, கைத்தறி துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம்

க. பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சர்.

செஞ்சி கே.எஸ். மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.

English summary
CM MK Stalin appoints ministers for corona to prevent actions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X