ஒருபுறம் கோயில் புனரமைப்பிற்கு ரூ100 கோடி.. மறுபுறம் பெரியார் நினைவு சமத்துவபுரம்.. ஸ்டாலின் சிக்ஸர்
சென்னை: முதன்மையான 100 திருக்கோயில்களைப் புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் பழைய சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 21ஆம் தேதி தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
திமுக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் ஆளுநர் உரையில் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்திருந்தனர்.

கோயில்கள்
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்தார். அப்போது பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக முதன்மையான 100 திருக்கோயில்களைப் புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். கோயில்களில் உள்ள குளங்கள், தேர்கள் சீரமைத்து விழாக்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

சமத்துவபுரம் திட்டம்
இதுதவிர மற்றொரு முக்கிய அறிவிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் பழைய சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். கருணாநிதி கொண்டு வந்த முக்கிய திட்டங்களில் ஒன்றான சமத்துவபுரம் திட்டத்தை ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம்
எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாத சமூகம் அடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தும் கட்சி திராவிடர் கழகம். அக்கட்சியிலிருந்து பிரிந்து வந்த திமுகவின் உயிர்நாடி கொள்கைகளில் இதுவும் ஒன்று. அதன்படி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் 1996-2001 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் சமத்துவபுரம் திட்டம்.

பெரியார் நினைவு சமத்துவபுரம்
அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் ஒரே இடத்தில் வசிக்கும் இத்திட்டத்திற்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்றே பெயர்சூட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்த சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு முறையில் இலவசமாய் வீடுகள் ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்.

முதல் சமத்துவபுரம்
தமிழ்நாட்டில் முதல் சமத்துவபுரம் 1998ஆம் ஆண்டு மதுரை மேலக்கோட்டை கிராமத்தில் கட்டப்பட்டது. 2001ஆம் ஆண்டு வரை மட்டும் 142 சமத்துவபுரங்கள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டன. வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என மக்களுக்கான தேவையான வசதிகளையும் உள்ளடக்கி இந்த சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

அதிமுக ஆட்சி
அதைத் தொடர்ந்து 2001-2006 அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 2006-11 திமுக ஆட்சியில் மீண்டும் மாநிலம் முழுவதும் சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்களும் தேவையான பராமிப்பு இன்றி இருந்தது. இந்தச் சூழலில் தான் முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரம் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்தத் திட்டத்தைக் கருணாநிதி தனது முக்கிய திட்டங்களில் ஒன்றாகவே பார்த்தார். திமுக ஆட்சியில் இத்திட்டத்திற்குத் தேவையான நிதிகள் உடனடியாக ஒதுக்கப்பட்டது. குறிப்பாக 2006-11 ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது, அவரது மேற்பார்வையிலேயே பல சமத்துவபுரங்களைக் கட்டியுள்ளார். பலவற்றை அவரே திறந்து வைத்துள்ளார். திமுக முன்னெடுத்த முக்கிய திட்டங்களில் ஒன்றான சமத்துவபுரம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications