தமிழ்நாட்டில் 30,000-க்கும் கீழே சென்ற கொரோனா.. தொடர்ந்து சரியும் தொற்று .. சென்னைக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த 4 நாட்களாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கொரோனா தொற்று நாளுக்கு, நாள் குறைந்து வருவது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களுக்கு ஆறுதல் செய்தி
ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 30,000-க்கு கீழே கொரோனா வந்துள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 32,24,236 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவர்கள் எத்தனை?
சென்னையில் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஆறுதலை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.செங்கல்பட்டில் 6 பேர் இறந்தனர். தஞ்சாவூரில் 2 பேரும், திருப்பூரில் 2 பேரும் இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 37,359 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 27,507 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 29,73,185 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்
2,13,692 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,41,762 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 6,00,24,712 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 5973 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

கன்னியாகுமரி, கோவை
செங்கல்பட்டில் 1883 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3740 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 545 பேருக்கும், மதுரையில் 592 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1035 பேருக்கும், திருவள்ளூரில் 726 பேருக்கும், திருச்சியில் 684 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1787 பேருக்கும், ஈரோட்டில் 1302 பேருக்கும், சேலத்தில் 1457 பேருக்கும், நாமக்கல்லில் 765 பேருக்கும், தஞ்சாவூரில் 805 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 168 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 944 பேருக்கும், தூத்துக்குடியில் 347 பேருக்கும், நெல்லையில் 612 பேருக்கும், விருதுநகரில் 499 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications