இனி கைகட்டி வேலை பார்க்க வேண்டாம்.. 30 லட்சம் வரை கடன் வழங்கும் தமிழக அரசு! எப்படி விண்ணப்பிப்பது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டாம்கோ) தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் எனவும், இதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு வீடு கட்டுதல், கல்வி உதவித்தொகை மற்றும் தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

tamco chennai

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு 30 லட்சம் வரை தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சுய தொழில் தொடங்குபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது என அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தனி நபர் கடன் திட்டத்தின் ரூ.30.00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு தனி நபர்களுக்கு சுயமாக தொழில் / வியாபாரம் செய்ய / கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்படுகிறது.

தகுதிகள் :

1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.

அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள் :

விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் அந்தந்த மாவட்டபிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலஅலுவலர்கள்/ மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.

1. சிறுபான்மையினர் மதச் சான்றிதழ்.

2. சாதி சான்றிதழ்.

3. வருமான சான்றிதழ்.

4. உணவு பங்கீடு அட்டை (அ) இருப்பிட சான்றிதழ்.

5. ஆதார் அட்டை.

6. திட்ட அறிக்கை.

7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.

1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.

2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லதுதொடக்கவேளாண்மைகூட்டுறவு வங்கி.

இரு திட்டங்களாக இந்த தனிநபர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

tamco chennai

1. முதல் திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மூன்று லட்சம் ரூபாய்க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக கடன் தொகை 20 லட்சம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி ஆண்களுக்கும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தலாம்.

2. இரண்டாவது திட்டத்தின் கீழ் திட்டம் 1ன் மூலம் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் 8 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 30 லட்சம் வரை வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வட்டி விகிதம் 8 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இந்த கண் தொகையை திருப்பி செலுத்தலாம்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+